நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கான ஊக்கத் தொகை ரூ.55,000 என்ன ஆச்சு?” - நயினார் நாகேந்திரன்

வெற்றி மயிலோன்

சென்னை: “ஆட்சிக்கு வருவதற்கு முன், ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆட்சிக்கு வருவதற்கு முன், ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 373-ல் முழங்கினீர்களே.

மாட்டுப் பொங்கலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் வேளையில், இந்த மாதமாவது அந்தத் தொகையைக் காளை வளர்ப்போர் கண்ணில் காட்டுவீர்களா?

கடந்த நான்கரை ஆண்டுகளாக மாதந்தோறும் வழங்காமல் ஏமாற்றி வந்த மொத்த தொகையையும் சேர்த்து தலைக்கு ரூ.55,000 ஆன நிலையில், எப்போது தான் ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போர் ஒவ்வொருவரிடமும் தாங்கள் பட்ட கடனை அடைப்பீர்கள்?

ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை நான்கரை வருடங்களாக வஞ்சிக்கும் பாவம் திமுக அரசை சும்மா விடாது. சமத்துவப் பொங்கல் என ஃபோட்டோஷூட் நடத்திவிட்டு, மாதந்தோறும் ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கு அல்வா கொடுக்கும் ஸ்டாலின் அரசுக்கு ஒட்டுமொத்தமாகக் கடிவாளம் போட்டு அடக்கி வைக்கும் நாள் தொலைவிலில்லை’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT