சென்னையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி களை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார். உடன் துறைச் செயலர் கொ.வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.42 லட்சம் நலத்திட்ட உதவி: அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​கள் 100 பேருக்​கு, ரூ.42 லட்​சம் மதிப்​புள்ள நலத்​திட்ட உதவி​களை தொழிலா​ளர் நல அமைச்​சர் முகமது பர்​வேஸ் வழங்​கி​னார்.

அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​களுக்​கான நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலா​ளர் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இவ்​விழா​வில் சென்​னை, செங்​கல்​பட்டு மற்​றும் திரு​வள்​ளூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த 100 பயனாளி​களுக்கு ரூ.42,21,900 மதிப்​பிலான உதவித்​தொகையை தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்டு துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ் வழங்​கி​னார். தொடர்ந்து அவர் பேசி​ய​தாவது:

அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​களுக்கு சமூகப் பாது​காப்பு உதவி​களை வழங்​கு​வ​தில் தமிழகம் முன்​னோடி மாநில​மாக திகழ்​கிறது.

அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​கள் நலவாரி​யங்​களால் வழங்​கப்​படும் விரி​வான நலத்​திட்​டங்​களில், திருமண உதவி, மகப்​பேறு உதவி, குழந்​தைகளின் கல்வி உதவி, விளை​யாட்​டுப் போட்​டிகளில் பங்​கேற்​ப​தற்​கான உதவி, மாதாந்​திர ஓய்​வூ​தி​யம், இயற்கை மரண உதவி, பணி​யிட விபத்து மரண உதவி மற்​றும் விபத்து ஊனம் உள்​ளிட்ட பல்​வேறு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அமைப்​பு​சாரா தொழிலா​ளர் நல வாரி​யங்​களில் அனைத்து சேவை​களும் கணினிமய​மாக்​கப்​பட்​டுள்​ளன. மாவட்​டந்​தோறும் தொழிலா​ளர் உதவி ஆணை​யர் (சமூக பாது​காப்பு திட்​டம்) அலு​வல​கங்​கள் மூலம் பதிவு, புதுப்​பித்​தல் மற்​றும் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​கள் நலவாரி​யங்​களில் கடந்த மே 10 முதல் செப்​டம்​பர் 30 வரை 3 லட்​சத்து 53 ஆயிரத்து 840 தொழிலா​ளர்​கள் புதி​தாக பதிவு செய்​துள்​ளனர்.

6 லட்​சத்து 88 ஆயிரத்து 674 தொழிலா​ளர்​களுக்கு பல்​வேறு நலத்​திட்​டங்​களின் கீழ் ரூ.688 கோடியே 8 லட்​சத்து 51 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது. 5 லட்​சத்து 88 ஆயிரத்து 296 ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் மாதம்​தோறும் ரூ.1,200 ஓய்​வூ​தி​யம் பெற்று வரு​கின்​றனர். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இவ்​விழா​வில், தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்டு துறை செயலர் கொ. வீர ராகவ ராவ், தொழிலா​ளர் ஆணை​யர் மா. வள்​ளலார் மற்​றும் கூடு​தல் தொழிலா​ளர் ஆணை​யர்​கள், இணை ஆணை​யர்​கள் மற்​றும்​ தொழிலா​ளர்​ துறை அலு​வலர்​கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT