தமிழகம்

சென்னை மருத்துவ கல்லுாரி முன்னாள் மாணவர்களுக்கு இணையதளம்: அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மருத்​துவ கல்​லுாரி முன்​னாள் மாணவர்​களுக்கு இணை​யதளத்தை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தொடங்கி வைத்​தார். சென்னை மருத்​துவ கல்​லுாரி, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யின் 190-வது பட்​டமளிப்பு விழா, கலை​வாணர் அரங்​கில் நடை​பெற்​றது.

இவ்​விழா​வில், சென்னை மருத்​துவ கல்​லுாரி​யின் முன்​னாள் மாணவர்​களுக்​காக https://www.alumnimmc.com/ என்ற இணை​யதளத்தை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தொடங்கி வைத்​து, முன்​னாள் மாணவர் என்ற அடிப்​படை​யில் தனது பெயரை​யும் பதிவு செய்​தார்.

சுகா​தா​ரத் துறை செயலர் தாரேஸ் அகமது, கல்​லூரி முதல்​வர் சாந்​தா​ராமன் உள்​ளிட்​டோர் விழா​வில் பங்​கேற்​றனர். விழா​வில், அமைச்​சர் அருண்​ராஜ் பேசி​ய​தாவது: நமது பாதையை தேர்ந்​தெடுத்து பயணித்​தால், நிச்​ச​யம் வெற்றி பெற முடி​யும்.

எனது சிந்​தனைப்​படி நான் வெற்றி பெற்​றுள்​ளேன். மக்​களுக்கு சேவை செய்​வேன். சொல்​லி​விட்டு செய்​வதை விட, செய்து விட்டு சொல்​வேன். மருத்​துவ மாணவர்​களுக்​கான விளை​யாட்டு கட்​டமைப்பு மேம்​படுத்​தப்​படும். புத்​தகம் மட்​டும் வாழ்க்கை இல்​லை.

வாழ்க்​கை​யில் எல்​லாமே இருக்க வேண்​டும். எனவே புத்​தகம், விளை​யாட்டு என இரண்​டும் வாழ்க்​கை​யின் அங்​க​மாக இருக்க வேண்​டும். அதே​நேரம், சமூகவலை தளங்​களில் முடங்கி விடக்​கூ​டாது.

மருத்​துவ புத்​தகத்தை போல், தினசரி செய்​தித்தாள்​கள், மற்ற புத்​தகங்​களை​யும் படி​யுங்​கள். இது​வரை பாது​காப்​பான சூழலில் இருந்து விட்​டீர்​கள்.

இனிதான் உங்​களுக்கு சவால்​கள் இருக்​கும். நம்​பிக்​கை​யுடன் இருங்​கள் நல்​லது நடக்​கும். நாம் நினைத்​தால் சா​திக்க முடி​யும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT