தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 24) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா முதல் மேற்கு விதர்பா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (மார்ச் 24) கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 25, 26 தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

27-ம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், 28, 29 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

          

இதர மாவட்டங்களில் ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் நாளை முதல் 25-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலும், 26, 27 தேதிகளில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT