அமைச்சர் ரமேஷ் | கோப்புப் படம்

 
தமிழகம்

“திமுக ஆட்சியைப் போல கோயில்களில் வணிக ரீதியான திட்டங்களை கொண்டு வர மாட்டோம்” - அமைச்சர் ரமேஷ் கருத்து

செய்திப்பிரிவு

திருச்சி: கடந்த திமுக ஆட்​சி​யில் இருந்​தது போல தேவை​யில்​லாத இடங்​களில், வணிகரீதி​யான திட்​டங்​களை நாங்​கள் கொண்டு வர மாட்​டோம் என்று அமைச்​சர் ரமேஷ் கூறினார்.

திருச்சி திரு​வானைக்​காவல் ஸ்ரீமத் ஆண்​ட​வன் கல்​லூரி​யில், மாவட்ட நிர்​வாகம் மற்​றும் மாவட்ட வேலை​வாய்ப்பு தொழில்​நெறி வழிகாட்​டும் மையம் சார்​பில் தனியார் வேலை​வாய்ப்பு முகாம் நேற்று நடை​பெற்​றது.

இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் முகாமை தொடங்கி வைத்து, தேர்​வானவர்​களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்​கினார். அதன்​பின், அமைச்​சர் ரமேஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் கடந்த திமுக ஆட்​சியை போல தேவை​யில்​லாத இடங்​களில், தேவை​யில்​லாத வணிகரீதி​யான திட்​டங்​களை நாங்​கள் கொண்டு வர விரும்​பவில்லை. திட்​டங்​களை அறி​வித்​து​விட்டு, பணம் கொடுக்​காமல் பாதி​யில் நிறுத்தி வைப்​பது அல்​லது பணிகளை தொடங்​காமலே இருப்​பது போன்ற வேலைகளை நாங்​கள் செய்​ய​வில்லை.

கோயில்​களுக்கு அடிப்​படை​யாக என்ன தேவையோ அதை செய்​வதற்​கான நட​வடிக்கை எடுத்து வரு​கிறோம். இது​குறித்து முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு முறை​யாக புரிந்து கொண்டு பதிலளிக்​கலாம். கோயில்​களில் எந்த பணிகளுக்​கும், யாரிடமும் பணம் கொடுக்க வேண்​டாம் எனப் பொது​மக்​களுக்கு எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

கோயில்​களுக்கு வரும் கர்ப்​பி​ணிகள், முதி​ய​வர்​கள், மாற்​றுத்​திறனாளி​கள் மற்​றும் பச்​சிளம் குழந்​தைகளு​டன் வருபவர்​களுக்​காக தனிவழி அமைக்​கப்​பட்​டுள்​ளது. சமீபத்​தில் மாற்​றுத்​திறனாளி​களுக்​காக மின்​சார சக்​கர நாற்​காலிகளும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளன. கோயில் தொடர்​பான புகார்​களை தெரி​விக்க பிரத்​யேக வலை​தளங்​களும், தொலைபேசி எண்​களும் ஏற்​கெனவே அறி​விக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT