தமிழகம்

தவெகவை இண்டியா கூட்டணிக்கு கொண்டு வருவோம்: சுதர்சன நாச்சியப்பன் விளக்கம்

செய்திப்பிரிவு

சிவகங்கை: மத​வாத சக்​தி​களை சேர்க்​கக் கூடாது என்ற நிபந்​தனையோடு தவெக​வுக்கு ஆதரவு என தெரிவித்த முன்​னாள் மத்​திய இணை அமைச்​சர் இ.எம்​.சுதர்​சன நாச்​சியப்​பன் தவெகவை இண்டியா கூட்டணிக்கு கொண்டு வருவோம் எனத் தெரி​வித்​துள்​ளார்.

சிவகங்​கை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் பாஜக நுழையக் கூடாது என்​பதை வலி​யுறுத்​தி​தான், திமுக​வுடன் காங்​கிரஸ் கூட்​டணி வைத்து தேர்​தலை சந்​தித்​தது. இந்த முறை 3 வித​மான தீர்ப்​பு​களை மக்​கள் கொடுத்​துள்​ளனர். தவெக​வுக்கு ஆதரவு தெரிவிக்​க​வில்லை என்​றால் பாஜக நுழைந்​து​விடும்.

இந்தக் காரணத்​துக்​காகத் தான் காங்​கிரஸ் தவெக​வுடன் கூட்​டணி வைக்​கிறது. எக்​காரணம் கொண்​டும் மதவாத சக்​தி​களை சேர்க்​கக் கூடாது என்ற நிபந்தனையோடு​தான் கூட்​டணி வைக்கப்​பட்​டுள்​ளது. திமுக​விட​மிருந்து பிரிந்து வரவில்​லை; ஒரு கருத்தை முன்​னிறுத்​தி​தான் கூட்​டணி வைக்​கிறோம். இண்​டியா கூட்​ட​ணி​யில் மிக முக்​கியக் கட்சி திமுக.

பாஜக​வின் அனைத்து எதிர்ப்​பு​களை​யும் மீறி திமுக ஆட்சி நடத்​தி​யது. நாடாளு​மன்​றத்​தில் ராகுல்​காந்​திக்கு உறு​துணை​யாக இருந்​தனர். இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள திமுகவை இழந்​து​விட்​டு, வேறு கட்​சி​யுடன் கூட்​டணி வைப்​பது சரி​யில்லை என்​ப​தால்​தான் கூட்​டணி தொடர்ந்​தது. மேலும், திமுக​வுடன் கூட்​டணி முறிந்​து​விட்​டது என்று சொல்ல முடி​யாது. தமிழக காங்​கிரஸூக்கு புதிய தலை​வருக்​கான அறி​விப்பு விரை​வில் வரும். தவெக​வுட​னான கூட்​டணி 2029 மக்​கள​வைத் தேர்​தலிலும் தொடரும். தவெகவை இண்​டியா கூட்​ட​ணிக்கு கொண்டு வரு​வோம்.

SCROLL FOR NEXT