தமிழகம்

“இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவதுதான் எங்களது இலக்கு” - விசிக வன்னியரசு தகவல்

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: இரட்டை இலக்​கத்​தில் போட்​டி​யிடு​வது​தான் எங்​கள் இலக்​கு. அதிக தொகு​தி​களைப் பெற்​றால்​தான் ஆட்​சி​யில் பங்கு குறித்து பேச முடி​யும் என்று விசிக பொதுச் செய​லா​ளர் வன்​னியரசு கூறி​னார்.

விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிபுத்​தூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பராசக்தி படம், மொழிப்​போர் தியாகி​கள் குறித்து இன்​றைய தலை​முறை​யினர் தெரிந்து கொள்​வதற்கு உதவி​யாக உள்​ளது. தற்​போது பாஜக மீண்​டும் இந்​தி​யாவை இந்து ராஷ்டிர​மாக கட்​டமைக்க முயல்​கிறது.

பாஜக​வின் முன்​னெடுப்​புக்கு எதி​ராக தமிழகத்​தில் உள்ள மற்ற அரசி​யல் கட்​சிகள் ஒன்​றிணைய வேண்​டிய தேவை இருக்​கிறது. தவெக விஜய், நாம் தமிழர் சீமான் ஆகியோர் பாஜகவை எதிர்க்க வேண்​டும். துணி​வின்றி அவர்​களோடு சமரசம் ஆகி விடு​கிறார்​கள்.

தமிழக இளைஞர்​கள் விஜய், சீமானிடம் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். சாதிய பாமக, மதவாத பாஜகவோடு எப்​போதும் விசிக​வுக்கு உறவு கிடை​யாது. ஆட்​சி​யில் பங்கு என்ற கோரிக்​கையை முதலில் எழுப்​பியது நாங்​கள்​தான். இந்த தேர்​தலில் விசிக இலக்கு இரட்டை இலக்​கத்​தில் போட்​டி​யிடு​வது​தான். அதிக இடங்​களை பெற்​றால்​தான் ஆட்​சி​யில் பங்கு குறித்து பேச முடி​யும். பாஜகவை வீழ்த்​து​வது​தான் எங்​களது ஒற்றை நோக்​கம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT