மன்னார்குடி அருகே சோழபாண்டியில் நேற்று நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசிய வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை.

 
தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை அறிவிப்பு

செய்திப்பிரிவு

திருவாரூர் / சென்னை: உள்​ளாட்​சித் தேர்​தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்​டி​யிடும் என அதன் நிறு​வனர் அண்​ணா​மலை அறி​வித்​துள்​ளார்.

திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி அருகே சோழ​பாண்​டி​யில் 15 ஆயிரம் மரக்​கன்​றுகளை நடும் பணியை வீ த லீடர்ஸ் அமைப்​பினர் நேற்று மேற்​கொண்​டனர். இந்​நிகழ்​வில் வீ த லீடர்ஸ் அமைப்​பின் நிறு​வனர் அண்​ணா​மலை கலந்​து​கொண்டு மரக்​கன்​றுகள் நடும் பணியை தொடங்கி வைத்​துப் பேசி​ய​தாவது: ஒரு ஆரோக்​கிய​மான சமு​தா​யத்தை உரு​வாக்​கி​னால் தான், ஆரோக்​கிய​மான அரசி​யலை பேச முடி​யும்.

கடந்த சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலின்​போது, இதே மன்​னார்​குடி​யிலும், தாராபுரத்​தி​லும் இப்​போது எம்​எல்​ஏக்​களாக இருக்​கக் கூடிய​வர்​களுக்கு வீதி வீதி​யாகச் சென்று பிரச்​சா​ரம் செய்​தேன். தற்​போது அந்த எம்​எல்​ஏக்​கள் வெற்​றி​பெற்ற பின்​னர், வாக்​களித்த மக்​கள் கையில் இருந்த மை காய்​வதற்​குள் அந்த கட்​சி​யிலேயே இல்​லை.

இத்​தகைய அரசி​யலை உடைக்க வேண்​டும். இது​போன்ற ஒரு​மோச​மான அரசி​யலுக்​குள் நாம் போக்​கூ​டாது. இதனால் மக்​களுக்கு எந்த பிரயோஜன​மும் இல்​லை. நாம் 234 தொகு​தி​யிலும், உள்​ளாட்சி அமைப்​பு​களி​லும் தலை​வர்​களை உரு​வாக்க வேண்​டும். இதற்​காக உள்​ளாட்​சித் தேர்​தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்​டி​யிடும். இவ்​வாறு கூறி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், வீ த லீடர்ஸ் அமைப்பு பொதுச் செய​லா​ளர் கரு​நாக​ராஜன் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​ற​னர்.

கேக் திட்டம் மறுபரிசீலனை: ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் ஊடகம், பிரச்​சா​ரம், மக்​கள் தொடர்பு பொதுச் செய​லா​ளர் அஸ்​பயர் கே.சு​வாமி​நாதன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: குழந்​தைகளுக்கு கேக் வழங்​கு​வதை யாரும் எதிர்க்​க​வில்​லை. ஆனால், 61.84 லட்​சம் குழந்​தைகளுக்கு பேக்​கேஜ் கேக் வழங்​கும் திட்​டத்​தின் மிகப்​பெரிய அளவு​தான் கவலை அளிக்​கிறது. கேக்​கில் 30 நாட்​கள் கெடா​மல் இருப்​ப​தற்​காக சேர்க்​கப்​பட்​டுள்ள பொருட்​கள் மற்​றும் சர்க்​கரை, கொழுப்பு மற்​றும் கலோரி அளவு குறித்த ஊட்​டச்​சத்து விவரங்​களை​யும் வெளி​யிட வேண்​டும்.

ஒரு முன்​னோட்​டத் திட்​டத்​தில் பரி​சோதனை செய்​யப்​படும் குழு​வினர் அல்ல, 61.84 லட்​சம் குழந்​தைகள். ஏதே​னும் அசம்​பா​விதம் ஏற்​பட்ட பிறகு விசா​ரணை நடத்​து​வதை​விட, அது ஏற்​ப​டா​மல் தடுப்​பதே நல்ல நிர்​வாக​மாகும். எனவே, இத்​திட்​டத்​தின் பாது​காப்பு அம்​சங்​கள் குறித்து முழு​மை​யான விளக்​கத்தை அளிக்​கும் வரை, லட்​சக்​கணக்​​கான குழந்​தைகளுக்கு கேக் வழங்​கும் திட்​டத்தை அரசு மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். இவ்​​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT