தமிழகம்

“ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் சிலரது அடித்தளமே ஆட்டம்...” - முதல்வர் விஜய் பேச்சு

வெற்றி மயிலோன்

சென்னை: “ஊழல் என்பது பழைய விஷயம்தான். மக்கள் அதற்கு பழகிவிட்டார்கள் என கடந்துபோக முடியாது. ஊழலை கட்டுப்படுத்த நாம் எடுத்த நடவடிக்கைகளால் இப்போது சிலரின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது” என முதல்வர் விஜய் பேசினார்.

தவெக சார்​பில் கடந்த மூன்று ஆண்​டுகளாக 10 மற்​றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் ​தேர்​வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்​களை பிடிக்​கும் மாணவ - மாணவியர்​களுக்கு ஊக்கத்​தொகை மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ்​கள் வழங்கப்​பட்டு வரு​கிறது. இந்தச் சூழலில், தவெக சார்​பில் இரண்​டாம் கட்ட கல்வி விருது மற்​றும் ஊக்​கத்​தொகை வழங்​கும் விழா இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் விஜய், “நான் பேசுவதை சிலர் அரசியலாக்க முயற்சி செய்வார்கள். யார் எதைப் பேசினாலும் எனக்கு கவலை இல்லை. என் செல்லங்களான உங்களிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும். நீங்கள் வாழ்வில் எங்கும் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை சொல்கிறேன்.

ஊழல் என்பது பழைய விஷயம்தான். மக்கள் அதற்கு பழகிவிட்டார்கள் என கடந்துபோக முடியாது. இந்த நோயை சரி செய்ய எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதனை சரிசெய்ய முடியுமா என எல்லோரும் கேட்பார்கள்? இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அவ்வாறு நாம் எடுத்த நடவடிக்கைகளால் இப்போது சிலரின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது.

கல்வித் துறையில் நடந்த ஊழல் பற்றி எல்லோரும் கேள்விபட்டிருப்பீர்கள். கல்வித் துறையிலேயே ஒரு ஊழல் நடந்தால் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும். மற்ற துறையில் தவறு நடந்தால் பரவாயில்லையா என சிலர் கேட்கலாம். கல்வித் துறைதான் எல்லாவற்றுக்கும் அடித்தளம். வருங்கால தலைமுறையே மாணவர்கள்தான். பள்ளிகளின் பாதுகாப்பிலேயே விளையாடியுள்ளார்கள். இதனை எல்லாம் பார்த்துக்கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்?

அப்போதுகூட நான் என் மேஜையில் 3 ஃபைல்கள் இருப்பதாக சொன்னேன். திறந்துதான் பாருங்களேன் என எதிர்க்கட்சிகள்தான் சொன்னார்கள். நான் பேரவையில் கையைக் கட்டிக்கொண்டுதான் இருந்தேன், அவர்கள் கேட்டபின்னர் செய்யாமல் இருக்க முடியுமா?

நூலக புத்தகங்களில் கூட ஊழல் செய்துள்ளார்கள். ஏஐ மூலமாக புத்தக கொள்முதலில் மிகப்பெரிய முறைகேட்டை செய்துள்ளார்கள். இதுபோல இன்னும் பல ஊழல்கள் வெளியில் வரும். நான் எப்போதும் உங்களை நல்ல வழியில் தான் நடத்தி கூட்டிச் செல்வேன்” என்றார் முதல்வர் விஜய்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT