செல்வப்பெருந்தகை

 
தமிழகம்

தமிழக காங். 23 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தகவல்

தமிழினி

சென்னை: “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். ஐந்து தொகுதிகள் குறித்து மீண்டும் பேசி முடிவெடுப்போம்.

          

தென்காசி மற்றும் விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை மீண்டும் நாங்கள் திரும்ப பெற்றுள்ளோம். ஈரோடு கிழக்கு ஏற்கெனவே நாங்கள் நின்ற தொகுதி, அதனால் அதை நாங்கள் திரும்ப பெற்றுள்ளோம். கன்னியாகுமரியில் நாங்கள் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அதில் ஒன்றை கேட்கிறார்கள்.

இது குறித்து அகில இந்திய தலைமையிடம் பேசியுள்ளார்கள். அது எங்களுடைய சிட்டிங் தொகுதி என்பதால் அதைக் கொடுப்பது கடினம். ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எங்கள் வேட்பாளருக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதனால் அது குறித்து முதல்வரிடம் பேசி இப்பிரச்சினையை தீர்ப்போம். வேட்பாளர் அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT