தமிழகம்

செப்.1 முதல் குப்பைகளை வகை பிரித்து வழங்க வேண்டும்: மீறினால் அபராதம் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: அ​திக கழி​வு​களை உரு​வாக்​கு​வோர் செப்.1 முதல் குப்​பைகளை மக்​கும் குப்​பை, மக்​காத குப்பை என வகை பிரித்து வழங்க வேண்​டும். மீறி​னால் அபராதம் விதிக்​கப்​படும் என மாநகராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை மாநக​ராட்​சி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் திடக்​கழிவு மேலாண்​மைப் பணி​கள் தொடர்​பாக அலு​வலர்​களு​ட​னான ஆய்​வுக் கூட்​டம் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தலை​மை​யில், ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இந்த ​கூட்​டத்​தில் ஆணை​யர் சமீரன் பேசி​ய​தாவது: அதிக திடக்​கழி​வு​களை உரு​வாக்​கும் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள், ஓட்​டல்​கள் உள்​ளிட்​டோர் திடக்​கழி​வு​கள் உரு​வாகும் இடத்​திலேயே மக்​கும் குப்​பை, மக்​காத குப்​பை, சுகா​தா​ரக் கழி​வு​கள், அபாயகர​மான கழி​வு​களை தனித்​தனியே வகை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் இது குறித்து மக்​களிடையே விழிப்​புணர்வு நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

செப்​.1-ம் தேதி முதல் அதி​கள​வில் திடக்​கழி​வு​களை உரு​வாக்​குபவர்​கள் கட்​டா​யம் திடக்​கழிவை வகை பிரித்து வழங்க வேண்​டும். மீறு​வோருக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். அதே​போல, குடி​யிருப்​பு​கள் உள்​ளிட்ட அனைத்து இடங்​களி​லிருந்​தும் குப்​பைகளை வகை பிரித்து வழங்க விழிப்​புணர்​வுப் பணி​யைத் தொடர்ந்து மேற்​கொள்ள வேண்​டும்.

தெற்கு வட்​டாரத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில் மக்​களிடையே குப்​பைகளை வகை பிரித்து வழங்​கு​வது தொடர்​பாக வீடு​வீ​டாகச் சென்று விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதைத் தொடர்ந்​து, வடக்​கு, மத்​திய வட்​டாரங்​களி​லும் வீடு​வீ​டாகச் சென்று விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படும்.

பெருங்​குடி குப்பை கிடங்​கில் முதற்​கட்​ட​மாக நடை​பெற்ற உயிரி அகழ்ந்​தெடுத்​தல் முறை​யில் குப்​பைகளை அகற்​றும் பணி முடிக்​கப்​பட்டு 94 ஏக்​கர் நிலம் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது. 2-ம் கட்​ட​மாக 5.50 லட்​சம் டன் குப்​பைகளை அகற்​றும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு இதில் 28 ஆயிரம் டன் குப்​பைகள் அகற்​றப்​பட்​டுள்​ளன.

தொடர்ந்து இப்​பணி​களை விரைந்து மேற்​கொள்ள வேண்டும். இதே​போல் கொடுங்​கையூர் குப்​பைக் கிடங்​கில் 66 லட்​சம்டன் குப்​பைகள் உயிரி அகழ்ந்​தெடுத்​தல் முறை​யில் அகற்​றும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு இது​வரை 44 லட்​சம் டன் குப்​பைகள் அகற்​றப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம் 16 ஏக்​கர் நிலம் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்​து, இப்​பணி​களை கண்​காணித்து விரைந்து முடிக்க வேண்​டும். அத்​திப்​பட்டு குப்பை கிடங்​கில் முதற்​கட்​ட​மாக நடை​பெற்ற உயிரி அகழ்ந்​தெடுத்​தல் முறை​யில் 1 லட்​சம் கன மீட்​டர் குப்​பைகள் அகற்​றப்​பட்​டன.

2-ம் கட்​ட​மாக 72 ஆயிரம் டன் குப்​பைகளை அகற்​றும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டு, இதில் 36 ஆயிரம் டன் குப்​பைகள் அகற்​றப்​பட்​டுள்​ளன. தொடர்ந்து இப்​பணி​களை விரைந்து மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்த ​கூட்​டத்​தில் துணை ஆணை​யர் சித்ரா விஜயன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

SCROLL FOR NEXT