தமிழகம்

அமித்ஷா பங்கேற்ற கூட்ட மேடை அருகே ட்ரோன் வீழ்த்தப்பட்டதா?

மின்காந்த அலை வீச்சால் செயலிழக்க செய்யப்பட்டதாக தகவல்

செய்திப்பிரிவு

காரைக்கால்: மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பங்​கேற்ற பொதுக்​கூட்ட மேடை அருகே பறந்த ட்ரோன் வீழ்த்​தப்​பட்​டது குறித்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். காரைக்​காலில் திருநள்​ளாறு சாலை​யையொட்டி உள்ள சந்​தைத் திடலில் நேற்று முன்​தினம் பாஜக சார்​பில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பங்​கேற்​றார்.

இதையொட்​டி, காரைக்​கால் மாவட்​டத்​தில் ட்ரோன்​கள் பறக்​க​விட தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், அன்று நண்​பகல் 12.45 மணி​யள​வில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா மேடை​யில் பேசிக் கொண்​டிருந்​த​போது, பொதுக்​கூட்ட மேடை​யில் இருந்து 500 மீட்​டர் தொலை​வில் முரு​க​ராமு திரை​யரங்​கம் அருகே பறந்த ட்ரோன் திடீரென செயலிழந்து தரை​யில் விழுந்​தது.

          

அந்​தப் பகு​தி​யில் மாடி​யில் இருந்து கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த மத்​திய பாது​காப்​புப் படை​யினர் மற்​றும் உள்​ளூர் போலீ​ஸார் இதைப் பார்த்​துள்​ளனர். இதையடுத்​து, போலீ​ஸாரும், மத்​திய பாது​காப்​புப் படை​யினரும் அங்கு சென்று ட்ரோன் எங்​கிருந்​து, யாரால் பறக்​க​விடப்​பட்​டது என விசா​ரணை நடத்​தினர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திருநள்​ளாறு வடக்​குத் தெரு​வைச் சேர்ந்த யோகேஷ்(27) என்​பவர் ட்ரோனை பறக்​க​விட்​டது தெரிய​வந்​தது. அவர், காரைக்​கால் திருநள்​ளாறு சாலை​யில் செல்​போன், மடிக்​கணினி உள்​ளிட்ட மின்​னணு பொருட்​கள் பழுது நீக்​கும் கடை வைத்​துள்​ளதை அறிந்​து, உடனடி​யாக அங்கு சென்று யோகேஷிடம் விசா​ரணை நடத்​தினர்.

அரசி​யல் தலை​வர்​கள் பங்​கேற்​கும் நிகழ்​வு​கள் உள்​ளிட்ட பல்​வேறு பொது நிகழ்​வு​களை ஒளிப்​ப​திவு செய்​து, சமூக வலை​தளங்​களில் பதிவேற்​றம் செய்​யும் பணி​யில் அவர் தொடர்ந்து ஈடு​பட்டு வரு​வதும், அந்த வகை​யில் அமித்ஷா பங்​கேற்ற பொதுக்​கூட்ட நிகழ்​வை​யும் வீடியோ பதிவு செய்​யும் நோக்​கில் ட்ரோனை பறக்​க​விட்​டதும் தெரிய​வந்​துள்​ளது.

மேலும், ட்ரோன் பறக்​க​ விட தடை விதிக்​கப்​பட்​டிருப்​பது குறித்து தான் அறிந்​திருக்​க​வில்லை என்​றும் யோகேஷ் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்து போலீ​ஸார் அவரை எச்​சரித்​து​விட்டு திரும்​பிச் சென்​று​விட்​டனர்.

பின்​னர், காரைக்​கால் நகர போலீ​ஸார் யோகேஷை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​று, அவரது சமூக வலைதள பக்​கங்​கள், பின்​புலம் உள்​ளிட்​ட​வற்றை ஆய்வு செய்​து, தீங்​கு விளைவிக்​கும் நோக்​க​ம் அவருக்கு இல்லை என்​பதை உறுதி செய்து கொண்​டு, எச்​சரித்து அனுப்​பினர்.

அதே​நேரத்​தில், தடையை மீறி ட்ரோன் பறக்​க​விட்​டதற்​காக போலீ​ஸார் அவர் மீது வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்​காந்த அலை: இதற்​கிடையே, அமித் ஷா பங்​கேற்ற கூட்​டத்​தின் மேடை​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த தேசிய பாது​காப்பு படை​யின் ட்ரோன் எதிர்ப்​புப் பிரிவு படை​யினர், மின்​காந்த அலை வீச்சு மூலம் ட்ரோனை செயலிழக்​கச் செய்து வீழ்த்​தி​ய​தாக​வும், மேடையை நோக்கி வானில் பறந்து வந்த ட்ரோன், மேடை இருக்​கும் பகு​தி​யில் குறிப்​பிட்ட தொலை​வுக்கு மேல் முன்​னேற முடி​யாமல் தாமாகவே செயலிழந்து விழுந்​து​விட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

எனினும், கீழே விழுந்த ட்ரோன் இது​வரை கண்​டறியப்​பட​வில்​லை. அதுகுறித்​தும் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். இந்​நிலை​யில், அமித்ஷா வரு​கை​யின்​போது, பாது​காப்பு ஏற்​பாடு​களில் குறை​பாடு இருந்​ததை ட்ரோன் சம்​பவம் உணர்த்​து​வ​தாக​வும் சிலர் குற்​றம்​சாட்​டுகின்​றனர்.

SCROLL FOR NEXT