தமிழகம்

குடிநீர், உப்பு, சர்க்கரை பாக்கெட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சரிக்கை வாசகம்: உத்தரவை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: குடிநீர், உப்​பு, சர்க்​கரை பாக்​கெட்​களில் மைக்ரோ பிளாஸ்​டிக் குறித்த விழிப்​புணர்வு எச்​சரிக்கை வாசகம் இடம்​பெற வேண்​டும் என்ற உத்​தரவை எதிர்த்து தொடரப்​பட்ட மனுக்​களை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

பிறந்த குழந்​தை​யின் நஞ்​சுக்​கொடி​யில் ‘மைக்ரோ பிளாஸ்​டிக்’ எனும் பிளாஸ்​டிக் நுண்​துகள்​கள் கண்​டறியப்​பட்​ட​தாக வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில், சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

அதன்​படி மைக்ரோ பிளாஸ்​டிக்​கால் மனிதர்​கள் மட்​டுமின்றி விலங்​கு​களுக்​கும் தீங்கு ஏற்​படும் நிலை​யில் அன்​றாடம் பயன்​படுத்​தும் குடிநீர் பாட்​டில்​கள், சர்க்​கரை, உப்பு பாக்​கெட்​களில் மைக்ரோ பிளாஸ்​டிக் துகள்​கள் இருக்​கலாம் என்​பதை சிவப்பு நிறத்​தில் எச்​சரிக்கை வாசகங்​களாக இடம்​பெறச் செய்ய வேண்​டும் என்​றும், இதுதொடர்​பாக சுற்​றறிக்கை பிறப்​பிக்க இந்​திய உணவு பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யத்​துக்​கும் நீதிப​தி​கள் உத்​தர​விட்​டிருந்​தனர்.

இந்த உத்​தரவை மறுஆய்வு செய்​யக்​கோரி இந்​திய உணவு பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​ய​மும், அந்த உத்​தரவை திரும்​பப் பெறக்​கோரி சுற்​றுச்​சூழலுக்​கான பெட் பேக்​கேஜிங் சங்​கம் சார்​பிலும் உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தன.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், டி.பரத சக்​ர​வர்த்தி ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது மைக்ரோ பிளாஸ்​டிக் குறித்த விழிப்​புணர்வு எச்​சரிக்கை வாசகம் இடம்​பெற வேண்​டும் என்ற உத்​தரவை மறுஆய்வு செய்ய முடி​யாது என மறுப்பு தெரி​வித்த நீதிப​தி​கள், மனுக்​களை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT