பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைவதை ஏற்றுக் கொண்ட வி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் இந்திய வீரர்கள். (கோப்பு படம்)

 
தமிழகம்

பாகிஸ்தானுக்கு எதிரான 1971 போரில் முக்கிய பங்காற்றிய பிரிகேடியர் வி.ஆர்.சுவாமிநாதன் காலமானார்

கோவையில் ராணுவ மரியாதையுடன் இன்று இறுதி நிகழ்ச்சி

டி.ஜி.ரகுபதி

கோவை: வங்​கதேசத்தை உரு​வாக்க பாகிஸ்​தானுக்கு எதி​ராக 1971-ல் நடந்த போர் வெற்​றி​யில் முக்​கிய பங்​காற்​றிய பிரி​கேடியர் வி.ஆர்​. சு​வாமி​நாதன் கோவை​யில் கால​மா​னார். அவருக்கு வயது 95.

தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் அருகே உள்ள சுவாமிமலை​யைச் சேர்ந்​தவர் வி.ஆர்​. சு​வாமி​நாதன். இவர், இந்​திய ராணுவத்​தில் பிரி​கேடிய​ராக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். ஓய்​வுக்கு பின்​னர், வி.ஆர்​.சு​வாமி​நாதன் கோவை வடவள்​ளி​யில் உள்ள, குடி​யிருப்​பில் மனைவி வசந்​தி​யுடன் வசித்து வந்​தார். இவருக்கு மகள்​கள் தரங்​கிணி, தீபா, ஜோதி ஆகியோர் உள்ளனர். கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்​னர் மனைவி கால​மா​னார். அதைத் தொடர்ந்து சுவாமி​நாதன் தனி​யாக வசித்து வந்​தார்.

          

இந்​நிலை​யில், முதுமை காரண​மாக மூச்​சு​விடு​வ​தில் சிரமம் ஏற்​பட்​டது. இதையடுத்து குடும்பத்​தினர், அவரை சிகிச்​சைக்​காக, கோவை ரேஸ்​கோர்ஸ் பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். நேற்று அதி​காலை சு​வாமி​நாதன் கால​மா​னார். இவரது மறைவுக்கு பல்​வேறு தரப்​பினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். இன்று நடைபெறும் இறுதிச் சடங்​கில் அவரது உடலுக்கு ராணுவ மரி​யாதை அளிக்​கப்பட உள்​ளது.

கால​மான பிரி​கேடியர் வி.ஆர்​.சு​வாமி​நாதன், 1949-ல் இந்​திய ராணுவத்​தில் சேர்ந்து 4 ஆண்​டு​கால பயிற்​சியை முடித்தபிறகு, 2-ம் லெப்​டினன்ட் அதிகாரி​யாக 1952-ல் பணியை தொடங்​கி​னார். பின்​னர் கேப்​டன், மேஜர், லெப்​டினன்ட், கர்​னல் ஆகிய நிலைகளில் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று திறம்பட பணி​யாற்​றி​னார்.

தொடர்ந்து பிரி​கேடிய​ராக பதவி உயர்வு பெற்ற அவர் 1986-ல் ஓய்வு பெற்​றார். ‘22 மராத்தா லைட் இன்​பேன்ட்​ரி’ படைப்​பிரி​வில் கட்​டளைத் தளப​தி​யாக பணி​யாற்​றிய அவர், முக்​கியப் போர்​களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி​யுள்​ளார். குறிப்​பாக, வங்​கதேச பிரி​வினை தொடர்​பாக 1971-ல் இந்​தியா- பாகிஸ்​தான் இடையே போர் ஏற்​பட்​டது. இந்தப் போரில் வி.ஆர்​.சு​வாமி​நாதன் பங்​கேற்று தனது படைக்கு தலைமை வகித்து வெற்​றிகர​மாக பாகிஸ்​தானுக்கு எதி​ரான போரை முடித்​தார்.

ஹில்லி பகு​தி​யில் பாகிஸ்​தான் படையை தோற்​கடித்​தார். அப்​போது ஆயிரக்​கணக்​கான பாகிஸ்​தான் வீரர்​கள், இவரது முன்​னிலை​யில் சரணடைந்​தனர். இந்த போருக்கு பின்​னரே வங்​கதேசம் உரு​வெடுத்​தது குறிப்​பிடத்​தக்​கது. அதே​போல், 1965-ல் நடை​பெற்ற பாகிஸ்​தானுக்கு எதி​ரான போரில், மேஜர் பொறுப்​பில் இருந்து போரில் ஈடு​பட்​டார். எந்த போராக இருந்​தா​லும், இவரது '22 மராத்தா லைட் இன்​பேன்ட்​ரி’ படைப்​பிரிவு தான் முதலில் செல்​லும்.

அவரது குடும்​பத்​தினர் கூறும்​போது, வி.ஆர்​.சு​வாமி​நாதனின் தந்தை ராணுவத்​தில் மருத்​து​வ​ராக இருந்​தார். ராணுவத்​தின் மீது இருந்த ஈர்ப்பு காரண​மாக தனது இளம் வயதிலேயே இந்​திய ராணுவத்​தில் இணைந்​தார். அந்தக் காலத்​தில் கடும் பயிற்​சிகளை முடித்து பணி​யில் சேர்ந்​தார் என்​றனர். இவரது இறுதிச் சடங்கு கோவை வடவள்​ளி​யில் இன்று நடை​பெறுகிறது.

SCROLL FOR NEXT