தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் ஆய்வு செய்தார்.படம்; ம.பிரபு

 
தமிழகம்

சென்னையில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது: மாநகர காவல் ஆணையர் தகவல்

வாக்​குச் சாவடிகளுக்கு நேரில் ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் அமை​தி​யான முறை​யில் தேர்​தல் நடந்து முடிந்​த​தாக, காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. காலை முதல் வாக்​காளர்​கள் ஆர்​வ​முடன் வாக்​களித்​தனர். முன்ன​தாக, சென்​னை​யில் விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​களை மேற்​கொள்ள காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக் உத்​தர​விட்​டிருந்​தார்.

தேர்​தல் ஆணை​யத்​தின் அறி​வுறுத்​தலின்​ பேரில், அனைத்து வாக்​குச்சாவடிகளி​லும் துப்​பாக்கி ஏந்​திய போலீ​ஸார் பாது​காப்​புக்​காக நிறுத்​தப்​பட்​டனர். அவர்​களு​டன் சட்​டம் - ஒழுங்கு மற்​றும் இதர பிரிவு போலீ​ஸாரும் ஒருங்​கிணைந்து பணி​யாற்​றினர். இந்​நிலை​யில், பாது​காப்பு ஏற்​பாடு​களை காவல் ஆணை​யர் நேரில் சென்று ஆய்வு செய்​தார்.

முதலில் கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்​கிலோ-இந்​தி​யன் மேல்​நிலைப் பள்​ளிக்​குச் சென்​றார். அங்கு பாது​காப்பு தொடர்​பாக ஆய்வு செய்த பின்​னர் வாக்​காளர்​களிடம் சென்று ஏதேனும் பாது​காப்பு குறை​பாடு உள்​ள​தா? என கேள்வி எழுப்​பி​னார். அதற்கு அவர்​கள் பாது​காப்பு திருப்​தி​யாக உள்​ள​தாகத் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, சவு​கார்​பேட்​டை​யில் உள்ள  கன்​னிகா பரமேஸ்​வரி பெண்​கள் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரிக்​குச் சென்று ஆய்வு செய்​தார். அதைத் தொடர்ந்​து, பதி​வான வாக்​கு​கள் வைக்​கப்பட உள்ள ராணிமேரி கல்​லூரிக்​குச் சென்று பார்​வை​யிட்​டு, அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்ள போலீ​ஸாருக்கு சில ஆலோ​சனை​களை வழங்​கி​னார். பின்​னர், அவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்​லூரிக்​குச் சென்று பாது​காப்பு ஏற்​பாடு​களை ஆய்வு செய்​தார்.

அப்​போது, அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அமை​தி​யான முறை​யில் தேர்​தல் வாக்​குப்​ப​திவு நடை​பெற விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. மத்​திய தொழில் பாது​காப்பு படை​யினர், உள்​ளூர் போலீ​ஸார் என 21 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பாது​காப்பு பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

பாது​காப்பு பணி​களை நேரில் சென்று ஆய்வு செய்​தேன். வாக்​காளர்​கள் தங்​களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்​றினர். எந்​த​வித அசம்​பா​விதங்​களும் இன்றி அமை​தி​யான முறை​யில் வாக்​குப்​ ப​திவு நடை​பெற்​றது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT