தமிழகம்

அலுவலர்களாக உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாததால் வாக்குப்பதிவு பணியில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​குச்​சாவடி பணி​யில் தமிழ், ஆங்​கிலம் தெரி​யாத மத்​திய அரசு ஊழியர்​களை நியமிப்​ப​தால், வாக்​குப்​ப​திவு பணியை மேற்​கொள்​வ​தில் சிக்​கல் ஏற்பட வாய்ப்​புள்​ள​தாக தேர்​தல் பணி​யாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் 5.73 வாக்​காளர்​கள் உள்​ளனர். தற்​போது நடை​பெற்று வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். வரும் ஏப்​.23-ம் தேதி வாக்குப்பதிவு நடை​பெற உள்​ளது. அதற்​காக தமிழகம் முழு​வதும் 75,064 வாக்​குச்​சாவடிகள் தயார்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் பணி​யில் சுமார் 3.40 லட்​சம் பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் சுமார் 3 லட்​சம் பேர் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களாக நியமிக்​கப்​பட்டு பயிற்சி வழங்​கப்​பட்​டுள்​ளது.

ஒவ்​வொரு வாக்​குச்​சாவடிகளி​லும் உள்ள வாக்​குச்​சாவடி தலைமை அலு​வலர்​கள், வாக்​குச்​சாவடி​யின் ஒட்​டுமொத்​தப் பொறுப்​பாளர்​களாக இருப்​பர். வாக்​குச்​சாவடி அலு​வலர்​-1, 2 மற்​றும் 3 ஆகியோ​ரும் பணி​யில் இருப்​பார்​கள்.

இந்த தேர்​தலில் தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் மத்​திய அரசின்​கீழ் இயங்​கும் கல்​பாக்​கம் அணுமின் நிலை​யம், ஆவடி படை உடை தொழிற்​சாலை, கனரக வாகன தொழிற்​சாலை, திருச்சி மற்று ராணிப்​பேட்​டை​யில் இயங்​கும் பெல் நிறு​வனங்​கள், வங்​கி​கள் மற்​றும் இதர மத்​திய அரசு நிறு​வனங்​களில் பணி​யாற்​று​வோர் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவர்​களுக்கு 2 கட்ட பயிற்​சி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே ஒரு வாக்​குச​சாவடி தலைமை அலு​வலர் மற்​றும் அவர்​கள்​கீழ் பணி​யாற்​றும் 3 அலு​வலர்​கள் என குழு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​களுக்​கான வாக்​குச்​சாவடிகள் இணைய குலுக்​கல் முறை​யில் விரை​வில் ஒதுக்​கப்பட உள்​ளன.

இந்​நிலை​யில், மத்​திய அரசு நிறுவன ஊழியர்​கள் பலருக்கு இந்தி மட்​டுமே நன்​றாக தெரிந்​திருக்​கிறது. சிலருக்கு ஆங்​கிலம் கூட தெரிய​வில்​லை. வாக்​காளர் பட்​டியல் தமிழில் மட்​டுமே அச்​சிட்டு வழங்​கப்​படு​கிறது.

இதனால், இவர்​களை வாக்​குச்​சாவடி அலு​வலர் 3-ல் மட்​டுமே நியமிக்க முடி​யும். ஒரு வாக்​குச்​சாவடி​யில் இது​போன்ற ஊழியர்​கள் 2 பேர் வந்​து​விட்​டால், வாக்​குச்​சாவடி தலைமை அலு​வலர் பாடு திண்​டாட்​டம்தான்.

எனவே தமிழ் தெரி​யாதவர்​களை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்​து​வதை தவிர்க்​கலாம் என தேர்​தல் பணி​யில் ஈடு​பட்​டுள்​ள அலு​வலர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT