தமிழகம்

வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியில் கட்சி முகவர்கள் தவறாக வழிகாட்டுகின்றனர்: வாக்காளர்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் எஸ்​ஐஆர் பணியில் அரசி​யல் கட்​சிகள் சார்​பில் நியமிக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்சாவடி முகவர்​கள் (பிஎல்​ஏ), வாக்​காளர்​களுக்கு தவறாக வழிகாட்டி குழப்​பத்தை ஏற்​படுத்​து​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. தமிழக வாக்​காளர் பட்​டியலில் 6.41 லட்​சம் வாக்காளர்​கள் உள்​ளனர். இவர்​களில் கடந்த 20 ஆண்​டு​களாக உயி​ரிழந்​தவர்​களின் பெயர்​கள் நீக்​கப்​ப​டா​மல் உள்​ளது.

இது கள்ள ஓட்​டுக்கு வழி​வகுப்​ப​தாக பல்​வேறு புகார்​கள் தேர்​தல் ஆணை​யத்​துக்கு சென்​றன. இதைத் தொடர்ந்​து, முதலில் சோதனை அடிப்​படை​யில் பிஹார் மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்​டது. அதைத் தொடர்ந்து தமிழகத்​தி​லும் கடந்த நவ.4 முதல் சிறப்பு தீவிர திருத்​தப்பணி நடை​பெற்றுவரு​கிறது.

இந்த பணி​களை மேற்கொள்ள அரசு அலு​வலர்​கள் 68,464 பேர் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களாக (பிஎல்ஓ) நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் ஒவ்​வொரு வீட்​டுக்​கும் குறைந்​த​பட்​சம் 3 முறை சென்​று, படிவங்களை வழங்​கி, பூர்த்தி செய்த படிவங்களை பெற வேண்​டும் என தேர்தல் ஆணை​யம் அறி​வுறுத்தி​யுள்​ளது. அவர்​களுக்​கானஊதி​யத்​தை​யும் ரூ.6 ஆயிரத்​திலிருந்து ரூ.12 ஆயிர​மாக உயர்த்​தி​யுள்​ளது.

2.37 லட்சம் முகவர்கள்: பிஎல்​ஓ.​களுக்கு உதவி செய்ய, அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் வாக்​குச்​சாவடி முகவர்​கள் (பிஎல்ஏ) 2.37 லட்​சம் பேர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் பூர்த்தி செய்த படிவங்களை நாளொன்​றுக்கு 50 எண்​ணிக்​கை​யில் பெற்​று, ‘படிவங்​களை நான் முறை​யாக சரி​பார்த்தேன். தவறு இருந்​தால் தண்​டனைக்கு உள்​ளாவேன் என்​பதை அறிவேன்’ என்ற உறு​தி​மொழி​யுடன் சமர்ப்​பிக்​கு​மாறு தேர்​தல் ஆணை​யம் அனு​ம​தித்​துள்​ளது.

மேலும் தேர்​தல் ஆணை​யத்​தின் https://voters.eci.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாகபடிவங்​களை சமர்ப்​பிக்​கும் வசதியும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. ஆனால், வாக்​காளர் பட்​டியலில் உள்ள பெயரும், ஆதா​ரில் உள்ள பெயரும் ஒன்​றாக இருந்​தால் மட்​டுமே இந்த சேவையை பயன்படுத்த முடி​யும் என்று கூறப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், சென்னை மாநகரின் பல்​வேறு பகு​தி​களில் வீடு​களுக்கே அலு​வலர்​கள் (பிஎல்​ஓகள்) செல்​வ​தில்லை என்​றும், படிவங்​களை வழங்​கு​வ​தில்லைஎன்​றும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்ளது.

சிறப்பு முகாம்கள்: சந்​தேகங்​களை நிவர்த்தி செய்​து ​கொள்ள, அனைத்து வாக்​குச் ​சாவடிகளி​லும் தற்​போது சிறப்பு முகாம்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

அங்கு சந்தேகங்களை கேட்க வரும் வாக்காளர்களை, அரசி​யல் கட்​சிகளின் சார்​பில் நியமிக்​கப்​பட்​டுள்ள முகவர்​கள் (பிஎல்​ஏக்​கள் தவறாக வழிநடத்​து​ வ​தாகவும், கணினி மையங்​கள் மற்றும் இ-சேவை வழங்கிவரும் தனி​யார் மையங்​களுக்கு ஆதார் அட்​டை​யுடன் சென்றால், அவர்​களே எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்​து, எஸ்​ஐஆர் படிவத்தை ஆன்​லைனில் சமர்ப்​பித்​து​விடு​வார்​கள் என்​றும் கூறு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

ஆனால், அதன்​படி, இ-சேவை, கணினி மையங்​களுக்கு சென்​றால், ஆதார், வாக்காளர் அட்டை​யில் இருக்​கும் பெயர்​கள் பொருந்​தாத சூழலில், படிவங்​களை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்​படு​கிறது.

இதனால், என்ன செய்​வதென்று தெரி​யாமல் வாக்காளர்கள் அவதிப்​பட்டு வரு​வ​தாகவும், இதை மாவட்ட தேர்​தல் அதி​காரி முறைப்படுத்தவேண்​டும் என்றும் பா​திக்​கப்​பட்​ட வாக்​காளர்​கள்​ கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT