தமிழகம்

தமிழக தேர்தல்: 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: வாக்​காளர் அடை​யாள அட்​டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணை​யம் அனு​ம​தித்​துள்ள 12 ஆவணங்​களில் ஏதே​னும் ஒன்​றைக் காண்​பிக்க வேண்டும்.

அதன் விவரம்:

1. ஆதார் அட்டை

2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டப் பணி அடை​யாள அட்டை

3. புகைப்​படத்​துடன் கூடிய வங்​கி, அஞ்​சல​கக் கணக்​குப் புத்​தகங்​கள்

4. ஆயுஷ்​மான் பாரத் அல்​லது தொழி​லா​ளர் நல அமைச்​சகத் திட்​டத்​தின்​கீழ் வழங்​கப்​பட்ட மருத்​து​வக் காப்​பீட்டு அட்டை

5. ஓட்​டுநர் உரிமம்

6. வரு​மான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை

7. தேசிய மக்​கள்​தொகைப் பதிவேட்​டின்​கீழ் இந்​திய தலை​மைப் பதி​வாள​ரால் வழங்​கப்​பட்ட திறன் அட்டை

8. இந்​திய கடவுச்​சீட்டு (பாஸ்​போர்ட்)

9. புகைப்​படத்​துடன் கூடிய ஓய்​வூ​திய ஆவணம்

10. மத்​திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறு​வனங்​கள், வரையறுக்​கப்​பட்ட பொது நிறு​வனங்​களின் தொழி​லா​ளர்​களுக்கு வழங்​கப்​பட்ட புகைப்​படத்​துடன் கூடிய பணி அடை​யாள அட்டை

11. மத்​திய அரசின் சமூக நீதி, அதி​காரமளித்​தல் அமைச்​சகத்​தால் வழங்​கப்​பட்ட மாற்​றுத் திற​னாளி​களுக்​கான தனித்​துவ அடை​யாள அட்டை

12. எம்​.பி., எம்​எல்ஏ அடை​யாள அட்​டை.

மேற்​கண்ட 12 ஆவணங்​களில் ஏதே​னும் ஒன்​றைக் காண்​பித்து வாக்​களிக்​கலாம். வேறொரு தொகு​தி​யின் வாக்​காளர் பதிவு அதி​காரி​யால் வழங்​கப்​பட்ட அடை​யாள அட்டை இருந்​தால், அதை​யும் ஆவண​மாகப் பயன்​படுத்​தலாம்.

அதே​நேரம், மேற்​கண்ட ஆவணங்​களில் ஒன்றை வைத்​திருப்​ப​தால் மட்​டுமே ஒரு வாக்​காளர் தனது வாக்​கைச் செலுத்​தி​விட முடி​யாது.

சம்​பந்​தப்​பட்ட வாக்​குச்​சாவடிக்கு அனுப்​பப்​பட்​டுள்ள வாக்​காளர் பட்​டியலில் அவரது பெயர் இருக்க வேண்​டும். அப்​போது​தான் அவர் வாக்​குரிமை​யைச் செலுத்​த​முடி​யும்.

SCROLL FOR NEXT