நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

“ஒரு ஓட்டு, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் துருப்புச் சீட்டு” - நயினார் நாகேந்திரன்

வெற்றி மயிலோன்

சென்னை: "நான் ஒருவன் ஓட்டுப் போடவில்லை என்றால் என்னவாகிவிடப் போகிறது? என்ற கோணத்தில் அல்லாமல், எனது ஒரு ஓட்டு, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் துருப்புச் சீட்டு என்ற தொலைநோக்குப் பார்வையில் மக்கள் சிந்திக்க வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இன்று தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்கள் அடிப்படை ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

“நான் ஒருவன் ஓட்டுப் போடவில்லை என்றால் என்னவாகிவிடப் போகிறது? என்ற கோணத்தில் அல்லாமல், “எனது ஒரு ஓட்டு, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் துருப்புச் சீட்டு” என்ற தொலைநோக்குப் பார்வையில் மக்கள் சிந்திக்க வேண்டும்.

முடியாட்சிக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த நமது பாரதம், பல பரிணாமங்களுக்குப் பிறகு குடியாட்சிக்கு மாறியுள்ளது. நமது ஒவ்வொருவரின் ஓட்டுரிமைக்குப் பின்பும் லட்சக்கணக்கானோரின் தியாகங்களும், நூற்றுக்கணக்கான போராட்டங்களும் அடங்கியுள்ளன என்பதை நாம் உணர்ந்து, நம் ஓட்டுரிமையைத் தவறவிடக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT