ஏ.பாலகிருஷ்ணன்

 
தமிழகம்

குமரி விவேகானந்தா கேந்திர தலைவர் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா, தலைவர்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி விவே​கானந்தா கேந்​திர தலை​வர் ஏ.பால​கிருஷ்ணன் (88) நேற்று முன்​தினம் இரவு உடல்​நலக் குறை​வால் கால​மா​னார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, ஆளுநர் விஸ்​வ​நாத் அர்​லேக்​கர் உள்​ளிட்ட தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

கேரள மாநிலம் பாலக்​காட்டை சேர்ந்த ஏ.பால​கிருஷ்ணன், 1981 முதல் 2001 வரை அகில இந்​திய விவே​கானந்தா கேந்​திர பொதுச் செய​லா​ள​ராக​வும், 2001 முதல் 2020 வரை துணைத் தலை​வ​ராக​வும், 2020 முதல் விவே​கானந்தா கேந்​திர தலை​வ​ராக​வும் பணி​யாற்றி வந்​தார்.

விவே​கானந்தா கேந்​திர நிறு​வனர் ஏக்​நாத்ஜி ரானடே​விடம் நேரடி​யாக பயிற்சி பெற்ற இவர், விவே​கானந்​தரின் லட்​சி​யங்​களை பரப்​பும் பணிக்​கு, வாழ்​நாள் முழு​வதும் தன்னை அர்ப்​பணித்​தவர். வடகிழக்கு மாநில​மான அருணாச்சல பிரதேசத்​தில் விவே​கானந்தா கேந்​தி​ரா​வின் சமூகத் தொண்​டு​களை வளர்த்​த​தில் முக்​கிய பங்கு வகித்​தார்.

கடந்த சில மாதங்​களாக உடல்​நலக்​குறை​யால் நாகர்​கோ​விலில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் ஏ.பால​கிருஷ்ணன் சிகிச்சை பெற்று வந்​தார். நேற்று முன்​தினம் இரவு அவர் கால​மா​னார். அவரது இறு​திச்​சடங்கு நாளை (29-ம் தேதி) மதி​யம் கன்​னி​யாகுமரி விவே​கானந்தா கேந்​திர வளாகத்​தில் நடை​பெறுகிறது.

பிரதமர் புகழாரம்: பால​கிருஷ்ணனின் மறைவுக்கு தனது எக்ஸ் தளப் பதி​வில்பிரதமர் மோடி குறிப்​பிட்டு இருப்​ப​தாவது: விவே​கானந்தா கேந்​தி​ர​வின் அகில இந்​திய தலை​வ​ராகப் பணி​யாற்​றிய ஏ.பால​கிருஷ்ணன் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்​கிறது.

சுவாமி விவே​கானந்​தரின் கொள்​கைகளுக்​காக​வும், சமு​தாயப் பணிக்​காக​வும் தனது வாழ்​வின் ஐந்து தசாப்​தங்​களுக்​கும் மேலான காலத்தை பால​கிருஷ்ணன் அர்ப்​பணித்​தார். விவே​கானந்தா கேந்​தி​ர​வின் ஆரம்​ப​கால ஜீவன்​வர்த்​தி​களில் ஒரு​வ​ரான அவர், நாடு முழு​வதும் அயராது உழைத்​தார். வடகிழக்கு மாநிலங்​களு​டன் அவர் மிக​வும் ஆழமான தொடர்பைக் கொண்​டிருந்​தார்.

கல்​வி, சமூகம் மற்​றும் தேசத்​தைக் கட்​டி​யெழுப்​பும் பணி​களில் அவர் முக்​கியப் பங்​காற்​றி​னார். விவே​கானந்தா கேந்​திர குடும்​பத்​துக்​கும், அவரது ஆதர​வாளர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். ஓம் சாந்​தி என குறிப்​பிட்​டுள்​ளார். அந்​தப் பதி​வில் பால​கிருஷ்ணனுடன் தாம் இருக்​கும் புகைப்​படங்​களை​யும், பிரதமர் பகிர்ந்​துள்​ளார்.

இது​போல், உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, தமிழக ஆளுநர் (பொ) விஸ்​வ​நாத் அர்​லேக்​கர் உள்​ளிட்ட தலை​வர்​கள் பால​கிருஷ்ணனின் மறைவுக்கு இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். கடந்த மாதம் கன்​னி​யாகுமரி வந்​திருந்த ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத், நாகர்​கோ​வில் மருத்​து​வ​மனைக்கு சென்​று, அங்கு சிகிச்சை பெற்று வந்த பால​கிருஷ்ணனிடம் நலம் விசா​ரித்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT