படம்:எஸ்.சத்திய சீலன்

 
தமிழகம்

கவிஞர்கள், எழுத்தாளர்களை வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்: பாரதி விழாவில் விஐடி வேந்தர் கோ.​விசுவநாதன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: ‘கவிஞர்​கள் எழுத்​தாளர்​களை அவர்​கள் உயிருடன் இருக்​கும்​போதே பாராட்ட வேண்​டும்’ என விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் கோ.​விசுவ​நாதன் வேண்​டு​கோள் விடுத்​தார்.

பார​தி​யார் சங்​கம் சார்​பில் 77-ம் ஆண்டு பாரதி பெரு​விழா மற்​றும் பாரதி விருதுகள் வழங்​கும் விழா, சென்னை மயி​லாப்​பூர் பார​திய வித்யா பவனில் நேற்று நடை​பெற்​றது.

இதில் வேலூர் விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கலந்​து​கொண்டு பாரதி விருதுகளை வழங்​கி​னார்.

விஜிபி குழு​மத்​தை சேர்ந்த ஜோன் ராஜா தாஸ், எழுத்​தாளர் பாரதி கிருஷ்ண கு​மார், பேராசிரியை களக்​காடு ராமசீ​தாலட்​சுமி, கோமல் தியேட்​டர்ஸ் நிர்​வாகி தாரணி கோமல், பரத​நாட்​டிய கலைஞர் எச்​.என்​.நந்​தினி சுரேஷ் ஆகியோர் விருதுகளை பெற்​றுக்​கொண்​டனர்.

இவ்​விழா​வில் கோ.​விசுவ​நாதன் பேசி​ய​தாவது: இன்​றைய தினம் பார​தி​யாரை நினைக்​கிறோம். அவரைப் பாராட்​டு​கிறோம். ஆனால், அவர் வாழ்ந்த காலங்​களில் அவரை யாரும் கண்​டு​கொள்​ள​வில்​லை. கவிஞர்​களை​யும், எழுத்​தாளர்​களை​யும் அவர்​கள் உயிருடன் இருக்​கும்​போதே பாராட்ட வேண்​டும்.

தமிழகத்​தில் 23 அரசு பல்​கலைக்​கழகங்​கள் உள்​ளன. அவற்​றில் 17 பல்​கலைக்​கழகங்​களில் துணைவேந்​தர் பதவி காலி​யாக உள்​ளது. பாரம்​பரியமிக்க சென்னைப் பல்​கலைக்​கழகத்​தில் கடந்த 3 ஆண்​டு​களாக துணைவேந்​தர் இல்​லை.

அரசு - ஆளுநர் இடையி​லான பிரச்​சினை​தான் இதற்​குக் காரணம். தற்​போது புதிய அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், துணைவேந்​தர்​களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இவ்​விழா​வில் எழுத்​தாளர் சிவசங்​கரி, தொழில​திபர் வி.ஜி.சந்​தோஷம் ஆகியோர் கவுரவிக்​கப்​பட்​டனர். தொழில​திபர் நல்லி குப்​பு​சாமி, பார​திய வித்யா பவன் இயக்​குநர் கே.என்​.​ராம​சாமி, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்​ஸ் மேலாண் இயக்​குநர் எம்​.​முரளி ஆகியோர் வாழ்த்​திப் பேசினர். முன்​ன​தாக, பார​தி​யார் சங்​கத்​தின்​ தலை​வர்​ பேராசிரியை உலக​நாயகி பழனி வரவேற்​று அறி​முக​வுரை ஆற்​றி​னார்​.

SCROLL FOR NEXT