தமிழகம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியது

பூ, பழம் விலை கிடுகிடு உயர்வு, கோயில்களில் சிறப்பு வழிபாடு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் விநாயகர் சதுர்த்தி விழா களை​கட்​டியது. பூக்​கள் மற்​றும் பழங்​கள் விலை உயர்ந்​தா​லும், கடைசிநேரத்​தில் ஆர்​வ​முடன் மக்​கள் வாங்கிச் சென்​றனர்.

விநாயகப் பெரு​மானின் அவதார திரு​நாளைக் கொண்​டாடும் வித​மாக ஒவ்​வொரு ஆண்​டும் ஆவணி மாத வளர்​பிறை​யில் சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்​டாடப்​படு​கிறது.

அதன்​படி, இன்​றைய தினம் தமிழகம் முழு​வதும் விநாயகர் சதுர்த்​தி​யையொட்டி அனைத்து கோயில்​களி​லும் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற உள்​ளன. இதற்​காக விரி​வான ஏற்​பாடு​கள் அந்​தந்த கோயில் நிர்​வாகம் சார்​பில் செய்​யப்​பட்​டுள்​ளது.

கோயில்​களுக்கு வரும் பக்​தர்​களுக்கு சுண்​டல், சர்க்​கரை பொங்​கல், தயிர் சாதம், சாம்​பார் சாதம், பொங்​கல், கொழுக்​கட்டை உள்​ளிட்ட பிர​சாதங்​கள் வழங்​கப்பட உள்​ளன.

பல இடங்​களில் அன்​ன​தானத்​திற்​கும் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. முன்​ன​தாக, சென்​னை​யில் விநாயகர் சதுர்த்​தி​யையொட்டி கோயம்​பேடு, மயி​லாப்​பூர், புரசை​வாக்​கம், தி.நகர், திரு​வான்​மியூர், பிராட்​வே, வடபழனி, சைதாப்​பேட்டை உள்​ளிட்ட இடங்​களில் நேற்று மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

சாலை ஓரத்​தில் திடீர் கடைகள் அமைக்​கப்​பட்டு பொரி, ஆப்​பிள், ஆரஞ்ச், சாத்​துக்​குடி, மக்​காச்​சோளம், கொய்யா பழங்​கள், கரும்​பு, தென்​னங்​கீற்று ஆகியவற்றின் விற்​பனை அமோக​மாக நடை​பெற்​றன.

கோயம்​பேடு சந்​தையை பொறுத்​தவரை பூக்​களின் விலை பல மடங்கு உயர்ந்​திருந்​தது. ஒரு கிலோ மல்லி ரூ.1500லிருந்து ரூ.2000 ஆகவும், சாமந்தி ரூ.120லிருந்து ரூ.250 ஆகவும், முல்லை ரூ.300லிருந்து ரூ.900 ஆகவும், சம்​பங்கி ரூ.50லிருந்து ரூ.500 ஆகவும் விற்​பனை​யானது.

பூக்​களைப் போல் பழங்​களின் விலை​யும் உயர்ந்​திருந்​தது. ஒரு கிலோ ஆப்​பிள் ரூ.220லிருந்து ரூ.250 வரை​யும், இறக்​குமதி ஆப்​பிள் ரூ.250 முதல் ரூ.300 வரை​யும், மாதுளை ரூ.180லிருந்து ரூ.200 வரை​யும், ஆரஞ்சு ரூ.200 முதல் 250 வரை​யும் விற்​பனை செய்​யப்​பட்​டது.

மேலும், சாத்​துக்​குடி ரூ.60 முதல் ரூ.80 வரை​யும், பன்​னீர் திராட்சை ரூ.120 முதல் 150 வரை​யும், பச்சை திராட்சை ரூ.150 முதல் ரூ.200 வரை​யும், கருப்பு திராட்சை ரூ.150, சப்​போட்டா ரூ.60, கொய்யா ரூ.100 முதல் ரூ.150 வரை​யும் விற்​பனை​யானது. வாழை இலை​யும் விலை கடுமை​யாக அதி​கரித்துக் காணப்​பட்​டது. ஒரு தலை​வாழை இலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்​பனை செய்​யப்​பட்​டது.

சுப​முகூர்த்த தினங்​களும், விநாயகர் சதுர்த்​தி​யும் ஒன்​றாக இணைந்து வந்​த​தால், பூ மற்​றும் பழங்​களின் விலை பல மடங்கு உயர்ந்​திருந்த போதி​லும், மக்​கள் தங்​களின் பண்​டிகைக் கால உற்​சாகத்​தில் சற்​றும் சளைக்​காமல் பொருட்​களை வாங்​கிச் சென்​றனர்.

தமிழகம் முழு​வதும் கோயில்​களில் விரி​வான பாது​காப்பு மற்​றும் பிர​சாத ஏற்​பாடு​களு​டன் இந்​த ஒரு வார கால ஆன்​மிகத்​ திரு​விழா தொடங்​கி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT