தமிழகம்

கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வவ்வால்களை பாதுகாக்க பட்டாசு வெடிக்காத கிராமங்கள்

ம.வீரவேல், கி.ஜெயகாந்தன்

கடலூர்/ஓசூர்: கடலூர் மாவட்​டம், வேப்​பூர் அடுத்த அடரி கிராமத்​தில் பழமை வாய்ந்த செல்​லியம்​மன் கோயில் தோப்பு உள்​ளது. இந்​தத் தோப்​பில் ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட பழந்​தின்னி வவ்​வால்​கள் (Fruit Bats) தங்​கி​யுள்​ளன.

கடந்த 10 ஆண்​டுகளுக்கு முன் இதைக்​காட்​டிலும் கூடுதல் எண்​ணிக்​கை​யில் இருந்த இந்த வவ்​வால்​கள் நாளடை​வில் குறைந்து கொண்டே வந்​ததால், கிராம மக்​கள் ஒன்று கூடி இவை​களை பாது​காக்க முடிவெடுத்​தனர். இயற்கை ஆர்​வலர்​களின் ஆலோசனைப்​படி, அன்று முதல் பட்​டாசு வெடிப்​பதை இக்​கிராமத்​தில் முற்​றி​லுமாக நிறுத்தி விட்​டனர்.

மேலும், அங்​கிருந்த நூற்​றாண்டு பழமை வாய்ந்த மரங்​களில் சில அழிந்த நிலை​யில், புதிதாக இலுப்பை, வேம்பு, புளியன் உள்​ளிட்ட நூற்​றுக்​கும் மேற்​பட்ட மரங்​களை கடந்த பத்​தாண்​டுகளில் வளர்த்து தோப்​பாக மாற்​றியுள்​ளனர்.

இர​வில் கல்​வ​ராயன் மலை பகுதிக்கு இரை தேடி சென்​று​விட்டு, காலை​யில் வந்து தங்​கும் வவ்​வால்​களை கிராம மக்​கள் யாரும் துன்​புறுத்​து​வது இல்லை. தொடக்​கத்​தில் வவ்​வால்​களை வேட்​டை​யாடி வந்த கும்​பலைக் கூட, கிராம பொது​மக்​கள் விரட்டி அடித்து விட்​டனர். இந்த பழந்​தின்னி வவ்​வால்​களை தங்​களின் வளத்​தைப் பெருக்​கும் பாது​காவலர்​களாக நினைக்​கின்​றனர் அடரி கிராம மக்​கள்.

இது​குறித்து அந்த கிராமத்​தைச் சேர்ந்த விவசாயி சிலம்​பரசன் கூறுகை​யில், “பறக்​கக்​கூடிய தன்​மையை பெற்ற, ஒரே பாலூட்டி இனம் வவ்​வால். இது கொஞ்​சம், கொஞ்​ச​மாக அழிந்து வரு​வ​தாக ஆராய்ச்சி வல்​லுநர்​கள் கூறுகின்​றனர். இவற்றை பாது​காக்க இயற்கை ஆர்​வலர்​களின் உதவியுடன் நாங்​கள் முயற்​சித்து, அதில் பயனும் அடைந்​துள்​ளோம். கடந்த 10 ஆண்​டுகளாக ஒலி எழுப்​பும் பட்​டாசுகளை வெடிப்​பதை எங்​கள் கிராம எல்லை​யில் தடைசெய்து அதைக் கடுமையாக பின்​பற்றி வரு​கிறோம். இத​னால் பழையபடி பழந்​தின்னி வவ்​வால்​களின் எண்​ணிக்கை கூடி​யிருக்​கிறது” என்​கிறார்.

“வவ்​வால்​கள் குடி​யிருக்​கும் தோப்​பின் வழி​யாக இறுதி ஊர்​வலம் சென்​றால் கூட, தோப்​பின் அருகே செல்​லும் போது தாரை, தப்​பட்​டைகளை கூட அடிக்​காமல் அமைதி​யாகவே கடந்து செல்​கிறோம்.

அரிய வகை அழிந்து வரும் பாலூட்டி இனமான பழந்​தின்னி வவ்​வால்​களை காப்​ப​தில், எங்​களது சுயநலமும் உண்டு. இவற்​றால் கிராமம் விருத்​தி​யாகும் என்ற நம்​பிக்​கையைத் தாண்டி, இவறறின் எச்​சங்​கள் விளை நிலங்​களில் விழ, மண் வளம் அதி​கரிக்​கிறது” என்​றும் அடரி கிராம மக்​கள் தெரி​விக்​கின்​றனர்.

இது​போல திட்​டக்​குடி வட்​டம், கொரக்கை கிராமத்​தில் உள்ள சாந்​தப்ப அய்​யனார் கோயில் அரு​கில் உள்ள நூற்​றாண்டு பழமை வாய்ந்த புளியன்​மரத்​தில், அரிய வகை பழந்​தின்னி வவ்​வால்​கள் வசித்து வரு​கின்​றன. கிராமத்​தி​லிருந்து சற்று தள்ளி அமைந்​துள்ள அப்​பகுதி​யிலும் பட்​டாசு வெடித்​தல், ஒலி எழுப்​பும் செயல்​களை கடந்த சில ஆண்​டுகளாக தவிர்த்து வரு​கின்​றனர்.

இதே போல், விழுப்​புரம் மாவட்​டம் வானூர் அரு​கில் உள்ள கழுப்​பெரும்​பாக்​கம் கிராமத்​திலும், நூற்​றாண்டு பழமையான பெரிய மரம் ஒன்​றில் ஆயிரக்​கணக்​கான பழந்​தின்னி வவ்​வால்​கள் வாழ்ந்து வரு​கின்​றன. கடந்த 25 ஆண்​டுகளுக்​கும் மேலாக இக்​கிராம மக்​கள், இந்த வவ்​வால்​களுக்​காக, பட்​டாசு வெடிப்​பதே கிடை​யாது. இதை ஒரு கிராம கட்​டுப்​பாடாகவே வைத்​திருக்​கின்​றனர்.

இது​குறித்து சமூக செயற்​பாட்​டாளர் ரமேசு கருப்​பையா கூறுகை​யில், “காடுகள் அழிக்​கப்​படுவ​தா​லும், பரு​வநிலை மாறு​வ​தா​லும் வவ்​வால்​கள், குறிப்​பாக பழந்​தின்னி வவ்​வால்​கள் வேக​மாக அழிந்து இயற்கை சமநிலை​யில் பாதிப்பு ஏற்​படு​கிறது. இவை​களைப் பாது​காக்க, அவை​களின் வாழிட கிராமங்​களில் அத்​தி​மரம், நாவல் போன்ற பழ மரங்​களை வளர்க்க வனத்​துறை அதி​காரி​கள் நட​வடிக்கை எடுக்க வேண்​டும். இது​போன்ற கிராமங்​களை வனத்​துறை அதி​காரி​கள் நேரில் சென்று பார்​வை​யிட்டு, அந்த கிராமங்​களை அங்​கீகரித்து விருது வழங்க நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​விக்​கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அருகே பாகலூர் கவுதாசபுரம் கிராமத்​தில் 500-க்​கும் மேற்​பட்ட மக்​கள் வசித்து வரு​கின்​றனர். இக்​கிராமத்​தின் ஏரிக்​கரையில் இருந்த பழமையான மாமரங்​களில் ஆயிரக்​கணக்​கான வவ்​வால்​கள் பல தலைமுறைகளாக வசித்து வரு​கின்​றன. அவற்றை காவல் தெய்​வ​மாகக் கருதும் கிராம மக்​கள், வவ்​வால்​களுக்கு இடையூறு ஏற்​படக் கூடாது என்​ப​தற்​காக தீபாவளி​யின்​போது அதிக சத்​தம் எழுப்​பும் பட்​டாசுகளை வெடிப்​ப​தில்லை.

மத்​தாப்பு, சங்​குச்​சக்​கரம் மட்​டுமே பயன்​படுத்து​கின்​றனர். இந்​நிலை​யில், வவ்​வால்​கள் வசித்த மாமரங்​கள் காய்ந்து விழுந்​ததால், அவை கோணப்​புளிய மரங்​களுக்கு இடம்​பெயர்ந்​துள்​ளன. எனவே, ஏரிக்​கரையில் மீண்​டும் மரங்​களை நட்டு வவ்​வால்​களுக்கு நிரந்​தர இருப்​பிடம் ஏற்​படுத்​தித் தர வேண்​டும் என கிராம மக்​கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT