தமிழகம்

அமைச்சர் கோவி.செழியனை முற்றுகையிட்ட கிராம மக்கள் - நடந்தது என்ன?

எந்த அடிப்படை வசதியும் இல்லை என புகார்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி வடுககுடி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வாக்குச் சேகரிக்கச் சென்ற உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது வாகனத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திருவிடைமருதூர் தொகுதியில் திமுக சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்பிரமணியன், நாதக சார்பில் திவ்யபாரதி, தவெக சார்பில் பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி வடுககுடி கிராமத்துக்கு கோவி.செழியன் வாக்குச் சேகரிக்கச் சென்றார்.

அப்போது, கிராம மக்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு, கிராமத்தில் தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என குற்றம்சாட்டி, கிராமத்துக்குள் வரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால், கோவி.செழியனுடன் சென்ற கட்சியினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் சென்று சமாதானம் செய்ததையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இருப்பினும், கோவி.செழியன் அந்த கிராமத்துக்குச் செல்லாமல், வேறு கிராமத்துக்கு வாக்குச் சேகரிக்கச் சென்றார். இந்தப் பிரச்சினை காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT