தமிழகம்

திருவாரூரில் மே 5-ம் தேதி 43-வது வணிகர் தின மாநாடு: விக்கிரமராஜா அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு சார்​பில் 43-வது வணி​கர் தின மாநாடு மே 5-ம் தேதி திரு​வாரூரில் நடை​பெற உள்​ளது.

இதுகுறித்து பேரமைப்​பின் தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பின் 43-வது வணி​கர் தின மாநாடு, வணி​கர் விழிப்​புணர்வு எழுச்சி மாநா​டாக திரு​வாரூரில் மே 5-ம் தேதி நடத்​தப்​பட்ட உள்​ளது.

          

மாநாட்​டுப் பந்​தல் கால்​கோள் விழா ஏப்​.5-ம் தேதி காலை 10.05 மணிக்கு நடை​பெறும். ஆங்​கிலேய ஆட்​சி​யாளர்​களால் அமல்​படுத்​தப்​பட்ட சட்​டங்​களின் அடிப்​படை​யில், வணி​கர்​களை சமூக விரோ​தி​களாக சித்​தரிக்​கும் நிலையை மாற்றி அமைக்க வேண்​டும்.

தேசத்​துக்​கான வரு​வாயை ஈட்​டு​வதற்​கான கட்​டமைப்பை கொண்​டிருக்​கும் வணி​கர்​களை அரசு ஊழியர்​களாக அங்​கீகரிக்​கும் நிலை உரு​வாக வேண்​டும்.

அதற்​கான விழிப்​புணர்​வு, எழுச்​சியை வணி​கர்​களிடம் ஏற்​படுத்​து​வதே இந்த மாநாட்​டின் நோக்​கம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT