தமிழகம்

‘ஹாலோகிராம்’ தொழில்நுட்பத்தில் விஜய்யின் ‘3டி பிம்ப’ பிரச்சாரம்

கும்​பகோணம் தவெக வேட்​பாளர் புது முயற்சி

செய்திப்பிரிவு

‘ஹாலோகி​ராம்’ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி தவெக தலை​வர் விஜய் நேரில் பிரச்​சா​ரம் செய்​வது போல புதிய முயற்​சியை கும்​பகோணம் தவெக வேட்​பாளர் மேற்​கொண்​டுள்​ளார்.

தவெக தலை​வர் விஜய் தனது பிரச்​சா​ரத்தை அடிக்​கடி ரத்து செய்து வரு​வ​தால், அவரது கட்​சி​யினர் அதிருப்​தி​யடைந்து வரு​கின்​றனர். மற்ற கட்​சித் தலை​வர்​கள் தமிழகம் முழு​வதும் தீவிர பிரச்​சா​ரம் செய்து வரும் நிலை​யில், தங்​கள் கட்​சித் தலை​வர் இன்​னும் தங்​கள் பகு​திக்கு பிரச்​சா​ரம் செய்ய வரவில்​லையே என நினைக்​கும் தவெக வேட்​பாளர்​கள் புதிய புதிய முயற்​சிகளை எடுத்து வரு​கின்​றனர்.

          

அந்த வகை​யில், திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர் தொகுதி தவெக வேட்​பாளர் நவல்​பட்டு விஜி, விஜய்​யின் சிலையை தனது பிரச்​சார வாக​னத்​தில் வைத்து வாக்கு சேகரிக்​கும் பணி மேற்​கொண்​டார். அதே​போல, கொளத்​தூர் தொகுதி தவெக வேட்​பாளர் வி.எஸ்​.​பாபு, டூப்​ளி​கேட் விஜய் போல உள்ள நபரை தன்​னுடன் பிரச்​சா​ரத்​துக்கு பயன்​படுத்​தி​னார். தற்​போது அடுத்த கட்​ட​மாக தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் தொகுதி தவெக வேட்​பாளர் வினோத், ‘ஹாலோகி​ராம்’ தொழில்​நுட்​பத்​தில் தனது பிரச்​சார வாக​னத்​தில் விஜய் நேரில் பேசுவது போல ‘3டி’ பிம்​பத்​தில் வடிவ​மைத்து பிரச்​சா​ரம் மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக அக்​கட்​சி​யினர் கூறுகையில், ‘‘விஜய் முகம் காட்​டி​னாலே போதும், பெரு​வாரி​யான வாக்கு கிடைக்​கும். எனவே, சென்​னையைச் சேர்ந்த தனி​யார் நிறு​வனம் மூலம் நாள் ஒன்​றுக்கு ரூ.35 ஆயிரம் வாடகை​யில் ஹாலோகி​ராமம் தொழில்​நுட்​பத்​தில் விஜய் நேரில் பிரச்​சா​ரம் செய்​வது போல வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இன்​னும் ஓரிரு நாளில் இந்த யுக்​தியை பயன்​படுத்தி பிரச்​சா​ரம் செய்​வோம்” என்​றனர்.

SCROLL FOR NEXT