தமிழகம்

தேர்தல் ரீவைண்ட்: விஜயகாந்தின் இரு கண்கள் விருத்தாசலம், ரிஷிவந்தியம்!

செய்திப்பிரிவு

செப்டம்பர் 14, 2005-ல் மதுரையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் தொடங்கினார் விஜயகாந்த். அதைத் தொடர்ந்து வந்த, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில், ‘தன் சொந்த மண்ணில் தேர்தலை எதிர்கொள்வார்’ என்று பேசப்பட்டது.

அதற்கு மாறாக, தென் மாவட்டத்தைக் காட்டிலும் தனக்கான பெரும் ரசிகர் கூட்டங்களைக் கொண்ட கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் களம் காண முடிவு செய்தார். அப்போது புதிதாக களம் இறங்கிய விஜயகாந்தை வீழ்த்த திமுக - பாமக இணைந்த கூட்டணி ஒரு புறம், அதிமுக மறுபுறம் கடுமையாக போராடியது.

தேமுதிக தனித்து நிற்க, விஜயகாந்த் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். திமுக மற்றும் அதிமுக அல்லாத மூன்றாவது சக்தியாக, தமிழக அரசியலில் விஜயகாந்த் வலம் வர, விருத்தாசலத்தின் வெற்றி அவருக்கு அச்சாரமிட்டது.

          

அதன்பிறகு 2011-ல் அப்போதைய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த (தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம்) ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். “விருத்தாசலத்தில் இருப்பது விருத்தகிரீஸ்வரர்..

ரிஷிவந்தியத்தில் இருப்பது அர்த்தநாரிஸ்வரர்.. எங்களுக்கு இரண்டும் இரு கண்கள்” என்றார் அப்போது விஜயகாந்த். அதன்பிறகு பல ஏற்றத்தாழ்வுகளை கண்டு விட்டது தேமுதிக.

ஆனாலும் அன்று தொடங்கி இன்று வரையிலும் விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகள் தேமுதிகவுக்கு செண்டிமெண்டான மற்றும் பிரியமான தொகுதிகளாக கருதப்படுகிறது.

திருக்கோவிலூர் தொகுதியிலும் கடந்த தேர்தல்களில் தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் இருந்தது குறிப் பிடத்தக்க ஒன்று.

SCROLL FOR NEXT