விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பரிசு பொருட்கள்.

 
தமிழகம்

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: இடைத்​தேர்​தல் நடை​பெற உள்ள விராலிமலை தொகுதி​யில், முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் சார்​பில் விசிலுடன் கூடிய பரிசுப் பொருட்​கள் வீடுவீடாக விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

விராலிமலை தொகுதி உரு​வான 2011-ல் இருந்து நடை​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவைத் தேர்​தல்​களி​லும் அதிமுக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்று வந்​தார். கடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் அவர் வெற்றி பெற்ற நிலை​யில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமியுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால், அக்​கட்​சி​யில் இருந்து வில​கியதுடன், எம்​எல்ஏ பத​வியையும் அவர் ராஜினாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தார். விராலிமலை தொகுதியை உள்​ளடக்கி மேற்கு மாவட்​டச் செய​லா​ளராக உள்​ளார்.

வழக்​க​மாக தேர்​தலை ஒட்டி வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது தொகுதி மக்​களுக்கு பொங்​கல் பானை உள்​ளிட்ட பரிசுப் பொருட்​களை விஜயபாஸ்​கர் விநியோகிப்​பார். ஆனால், முதன்​முறை​யாக தனக்கு வாக்​களித்​தவர்​களுக்கு நன்றி தெரி​விக்​கும் வித​மாக, எம்​எல்ஏ பத​வியை ராஜினாமா செய்த பிறகு கடந்த ஜூன் மாதத்​தில் எவர்​சில்​வர் பாத்திரம், குலோப் ஜாமூன் டின், நன்றி கடிதம், எழுதுபொருட்​கள் ஆகியவை அவரது படத்​துடன் கூடிய பையில் வைத்து தொகுதி முழு​வதும் விநியோகிக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், விராலிமலை உள்​ளிட்ட 5 தொகுதி​களில் விரைவில் இடைத்​தேர்​தல் அறி​விக்​கப்​பட உள்ள நிலை​யில், விஜயபாஸ்​கர் சார்​பில் எவர்​சில்​வர் பாத்திரம், குலோப் ஜாமூன் டின், தவெக சின்​னமான விசில் ஆகிய​வற்றை விஜயபாஸ்​கர் படத்​துடன் கூடிய துணிப் பையில் வைத்​துத் தொகுதி முழு​வதும் அவரது ஆதர​வாளர்​கள் வீடுதோறும் விநியோகித்து வரு​கின்​றனர்.

இது​குறித்து விஜயபாஸ்​கர் ஆதர​வாளர்​கள் கூறும்​போது, “இடைத்​தேர்​தலில் தவெக-வில் இருந்து விஜயபாஸ்கரே போட்​டி​யிடுவார். அதற்​காக தொகுதி முழு​வதும் தீவிர​மாக விளம்​பரம் செய்து வரு​கிறோம். மேலும், வாக்​காளர்​களின் கவனத்தை ஈர்ப்​ப​தற்​காகப் பரிசுப் பொருட்​கள் விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்​றன” என்​றனர்.

திமுக குற்​றச்​சாட்டு: சென்னை அண்ணா அறிவாலயத்​தில் செய்​தி​யாளர்​களிடம் திமுக முன்​னாள் அமைச்​சர் ரகுபதி கூறிய​தாவது: விராலிமலை தொகுதிக்கு தேர்​தல் தேதி அறி​விக்​க​வில்லை. வேட்​பாளர் அறி​விக்​க​வில்லை. ஆனால், முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் அனைத்து குடும்ப அட்​டைதா​ரர்​களுக்​கும் எவர்​சில்​வர் பெரிய பாத்​திரம், அதற்​குள் ஸ்​வீட் பாக்ஸ், ரசகுல்லா டின் ஆகிய​வற்றை வைத்து வீட்​டுக்கு வீடு கொடுத்​துள்​ளார். ஒரு வீட்​டுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்​புள்ள பொருட்​களை முதல் கட்​ட​மாக விநியோகிக்​கத் தொடங்கி இருக்​கிறார்.

இது​தான் தூய்​மையான ஆட்சி. ஓட்​டுக்கு எது​வுமே கொடுக்க மாட்​டோம் என்​றார்​கள். ஆனால், விஜயபாஸ்​கர் 90 ஆயிரம் குடும்ப அட்​டைதா​ரர்​களுக்​கும் வீடு தவறாமல் பொருட்​களை கொடுத்​துக் கொண்​டிருக்​கிறார். அது​த​விர மற்​றவர்​களுக்கு எல்​லாம் ரொக்​க​மாக பணம் கொடுக்​கிறார். தேர்​தல் எப்​போது வருமோ தெரிய​வில்லை. இப்​பவே பட்​டுவாடா ஆரம்​பிச்​சிட்​டாங்​கன்னா எத்​தனை கோடியை அங்கே கொட்​டப் போகிறார்​கள் என்​பதை பார்க்க வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT