தமிழகம்

வெற்றி பெற்றதும் பனையூருக்கு வந்துவிடுங்கள்: தவெக வேட்பாளர்களுக்கு விஜய் திடீர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: “வெற்றி பெற்​றதும் எங்​கும் தங்​காமல் உடனடி​யாக பனையூருக்கு வந்​து​விட வேண்​டும்” என்று தவெக வேட்​பாளர்​களுக்கு அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை வரும் 4-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் நேற்று முன்​தினம் வெளி​யாகின.

பெரும்​பாலான கணிப்​பு​கள் திமுக மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என தெரி​வித்​துள்​ளன. ஆக்​சிஸ் மை இந்​தியா நிறு​வனம் மட்​டும், தவெக 98 முதல் 120 இடங்​களை கைப்​பற்றி முதல் முயற்​சி​யிலேயே ஆட்​சியை பிடிக்க வாய்ப்​புள்​ள​தாக கணித்​துள்​ளது.

இந்​நிலை​யில், பனையூரில் உள்ள கட்​சித் தலை​மையகத்​தில் அனைத்​துத் தொகுதி வேட்​பாளர்​களு​ட​னும் விஜய் நேற்று அவசர ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதுகுறித்து தவெக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: வேட்​பாளர்​கள் பலர், வாக்கு சேகரிக்க சென்​ற​போது தாங்​கள் சந்​தித்த நெருக்​கடிகள், வாக்​குப்​ப​தி​வின்​போது நடந்த மோதல்​கள் குறித்து தெரிவித்தனர். அனைத்​தை​யும் பொறுமை​யாகக் கேட்​டுக் கொண்ட விஜய், ‘கருத்​துக்​கணிப்​பு​களை புறம் தள்​ளுங்​கள்.

மக்​கள் தீர்ப்பு நமக்கு சாதக​மாக இருக்​கும் என நான் உறு​தி​யாக நம்​பு​கிறேன். நீங்​களும் அதே நம்​பிக்​கை​யுடன் இருங்​கள். அதே​நேரத்​தில் வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது கடு​கள​வும் பிச​காமல் விழிப்​புடன் இருக்க வேண்​டும்.

அனைத்​தும் சரி​யாக இருப்​பதை உறுதி செய்த பிறகே கையெழுத்​திட வேண்​டும்’ என அறி​வுறுத்​தி​னார். மேலும், “வெற்​றிச் சான்​றிதழ் வாங்​கிய கையோடு எங்​கும் தங்​கி​வி​டாதீர்​கள்; வேறு யாருடைய அழைப்​புக்​கும் செவி​சாய்க்க வேண்​டாம்.

நேரடி​யாக பனையூர் அலு​வல​கத்​துக்கு வாருங்​கள். உங்​களுக்​காக நான் இங்கே காத்​திருப்​பேன்” என தெரி​வித்​தார், தேர்​தல் முடிவுக்கு பிந்​தைய ‘கு​திரை பேர’ அரசி​யலை முன்​கூட்​டியே முறியடிக்க தயா​ராகி​விட்​டார். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

கட்​சி​யின் இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல் குமார் கூறும் ​போது, “எங்​கள் தலை​வர் அனைத்து வேட்​பாளர்​களு​ட​னும் கலந்​துரை​யாடி, வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது பின்​பற்ற வேண்​டியது குறித்து அறி​வுரை வழங்​கி​யுள்​ளார். அனைத்து வேட்​பாளர்​களும்​ இதில்​ பங்​கேற்​றனர்​” என்​றார்​

SCROLL FOR NEXT