தமிழகம்

வேட்பாளர் பெயரை மாற்றிய விஜய்: தொண்டர்கள் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

கொளத்தூரில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை அக்கட்சி தலைவர் விஜய் மாற்றி சொன்னதால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். அதில் அவர் பேசியதாவது, "பெண்கள் பாதுகாப்பில்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப்பொருள் அதிகமாக இருக்கும் நம் தமிழ்நாட்டை காப்பாற்றியே ஆகணும். தமிழ்நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு தீயசக்தி திமுக தான் காரணம்.

          

இப்படி ஒன்றுக்குமே உதவாத ஒரு ஆட்சியை நடத்திவிட்டு விரைவில் விடைபெறப்போகும் ஸ்டாலின் சார் தான் காரணம். இந்த ஐந்து வருடத்தில் ஆட்சி நடத்தினாங்களா? இல்ல வேற எதாவது நடத்தினாங்களா? சோறு தண்ணீர் கூட இல்லாமல் இருந்து விடலாம். ஆனால் அடிப்படை பாதுகாப்பு இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

ஏப்ரல் 23ஆம் தேதி காலையில் ரெடி ஆகி வாக்காளர் அட்டையை எடுத்துக்கொண்டு முதல் ஆளாக பூத்தில் நின்று விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். இந்த தொகுதியில் நமது வேட்பாளராக பிரபு நிற்கிறார். அவர் வேறு, நான் வேறு இல்லை. தயவு செய்து விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்" என்றார்.

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் வி.எஸ்.பாபு என்பவர்தான் போட்டியிடுகிறார். ஆனால், அவரின் பெயரை மாற்றி பிரபு என்று விஜய் சொன்னதால் அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

SCROLL FOR NEXT