தமிழகம்

சமூக வலைதளங்களை பயன்படுத்தி வெற்றி வாகை சூடிய விஜய்

செல்போன் வழியாக செய்யப்பட்ட பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சென்னை: சமூக வலை​தளங்​களை முக்​கிய கரு​வி​யாக பயன்​படுத்தி விஜய் வெற்றி வாகை சூடி​யுள்​ளார். விஜய்​யின் பிரச்​சா​ரம் செல்​போன் மூல​மாக பட்டி தொட்டி எங்​கும் மக்​களைச் சென்​றடைந்​தது.

தமிழ் திரை​யுல​கின் உச்ச நடிக​ரான விஜய், தமிழக வெற்​றிக் கழகம் (தவெக) கட்​சியை கடந்த 2024-ம் ஆண்டு பிப்​.2-ம் தேதி தொடங்​கி​னார். விஜய்​யின் அரசி​யல் வரு​கையை பலரும் வரவேற்​றனர். முக்​கிய கட்​சிகளுக்கு தனி​யாக தொலைக்​காட்சி சேனல்​கள் இருந்த நிலை​யில், தனக்​கென சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​திக் கொள்ள விஜய் முடிவு செய்​தார்.

வசதி படைத்​தவர்​கள் முதல் சாதாரண தொழிலா​ளர்​கள் வரை அனை​வரின் கைகளி​லும் ஸ்மார்ட் போன்​கள் இருப்​ப​தால், அதன் வழி​யாக தனது தேர்​தல் பிரச்​சா​ரத்தை அவர்​களிடம் கொண்டு செல்ல விஜய் முடிவுசெய்​தார். தவெக கட்​சிக்​கென தனி​யாக யூடியூப் சேனல் தொடங்​கப்​பட்​டது. அதே​போல் பேஸ்​புக், எக்​ஸ், இன்​ஸ்​டாகி​ராம், டெலிகி​ராம் உள்​ளிட்ட அனைத்து சமூக வலை​தளங்​களி​லும் பேஜ்கள், கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டது.

இவற்​றைப் பின்​பற்றி அவரது ரசிகர்​கள், ஆதர​வாளர்​கள், கட்​சி​யினரும் தவெக பெயரில் பல்​வேறு யூடியூப் சேனல்​கள், பேஜ்கள், கணக்​கு​களைத் தொடங்​கினர். விஜய்க்​கும் தவெக​வுக்​கும் ஆதர​வாக தொடர்ந்து பதி​விட்​டனர். அதே​நேரம் விமர்​சனம் செய்​தவர்​களுக்கு தக்க பதிலடி​யும் கொடுத்​தனர்.

தவெக​வின் வேட்​பாளர்​கள் அறி​விப்​பு, தேர்​தல் அறிக்கை வெளி​யீடு நிகழ்​வு​கள், விஜய்​யின் ரோடு ஷோ, பிரச்​சா​ரங்​கள், மேடைப் பேச்​சுகள் அனைத்​தும் சமூக வலை​தளங்​களில் முழு​வது​மாக வெளி​யிடப்​பட்​டது. ரீல்​ஸ்​களாக​வும், விஜய்க்கு கூடும் கூட்​டங்​கள் புகைப்​படங்​களாக​வும் வெளி​யானது.

குறிப்​பாக கடைசி சில நாட்​களில் நடந்த பிரச்​சா​ரத்​தின் போது தூத்​துக்​குடி, திருப்​பூர், சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் விஜய்க்​காக கூடிய லட்​சக்​கணக்​கான கூட்​டங்​களின் வீடியோக்​கள், புகைப்​படங்​கள் மிகப்​பெரிய அளவில் பேசுபொருளானது; அனை​வரை​யும் ஆச்​சரியமடையச் செய்​தது.

முக்​கிய​மாக தவெக​வின் பாடல்​கள் குழந்​தைகள் முதல் பெரிய​வர்​கள் வரை அனை​வரிட​மும் மிகப்​பெரிய அளவில் வரவேற்​பைப் பெற்​றது. நகரங்​கள் முதல் குக்​கி​ராமங்​கள் வரை பட்டி தொட்டி எங்​கும் செல்​போன் மூலம் விஜய்​யின் பிரச்​சா​ரம் சென்​றடைந்​தது. இதனால் விஜய்க்கு தமிழகம் முழு​வதும் பெரிய அளவில் ஆதரவு அலை வீசத் தொடங்​கியது. அந்த ஆதரவு அலை விஜய்க்கு தேர்​தலில் மிகப்​பெரிய வெற்​றியை தேடித் தந்​துள்​ளது.

SCROLL FOR NEXT