சென்னையில் நேற்று நடைபெற்ற வெற்றித் தமிழ்நாடு மாநாட்டில், ரூ.4,476 கோடி முதலீடு மற்றும் 5,074 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எல் அண்ட் டி,  சிமென்ட்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

 
தமிழகம்

முதல்வர் விஜய் தலைமையில் ‘வெற்றித் தமிழ்நாடு’ முதலீட்டாளர் மாநாடு: ரூ.67,452 கோடிக்கு 97 ஒப்பந்தங்கள்

1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின், ‘வெற்​றித் தமிழ்​நாடு முதலீட்​டாளர்​கள் மாநாடு-2026’ சென்னை கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு தலைமை தாங்​கிய முதல்​வர் விஜய், ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடு​களுக்​கான ஒப்​பந்​தங்​களை மேற்​கொண்​டார்.

மாநாட்​டில் தொழில் துறை அமைச்​சர் கீர்த்​தனா தனது வரவேற்​புரை​யில் பேசி​ய​தாவது: தமிழகத்தை 2036-ம் ஆண்​டுக்​குள் 1.5 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ர​மாக மாற்​று​வது எங்​கள் இலக்​கு. ஆட்​சிப் பொறுப்​பேற்ற 100 நாட்​களி​லேயே ரூ.1 லட்​சம் கோடிக்​கும் மேலான முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்டு உள்​ளன.

இதன்​மூலம் 1.20 லட்​சம் புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்பட உள்​ளன. தொழில் தொடங்​கு​வதற்​கான ஒப்​புதல் 21 நாட்​களுக்​குள் வழங்​கப்​படு​வது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் கீர்த்​தனா பேசி​னார்.

இந்த மாநாட்​டில் முதல்​வர் விஜய் முன்​னிலை​யில், ரூ.67,452 கோடி மதிப்​பிலான 97 புதிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. இதன் மூலம் ஒரு லட்​சத்து 6,998 பேருக்கு வேலை​வாய்ப்​பு​ கிடைக்கும். மாநாட்​டுக்கு முன் செய்​யப்​பட்ட ஒப்​பந்​தங்​களை​யும் சேர்த்​து, தவெக பொறுப்​பேற்ற முதல் 100 நாட்​களுக்​குள் ஒட்​டு மொத்​த​மாக ரூ.1,02,514 கோடி முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டு, ஒரு லட்​சத்து 21,788 பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளன.

விண்வெளி முதல்... இந்​தி​யா​வின் முதல் தனி​யார் விண்​வெளி நிறு​வனங்​களான ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ மற்​றும் ‘அக்​னிகுல் காஸ்​மோஸ்’ ஆகிய நிறு​வனங்​கள் தூத்​துக்​குடி​யில் ரூ.650 கோடி​யில் ஏவு​கலன் தயாரிப்பு மற்​றும் சோதனை மையங்​களை அமைக்​கின்​றன.

மின்​சார இரு சக்கர வாகன உற்​பத்​திக்​காக அல்ட்ரா வயலட் நிறு​வனம் கிருஷ்ணகிரி​யில் ரூ.779 கோடி​யிலும், செமி கண்​டக்​டர் சர்​வர் உற்​பத்​திக்​காக ‘சூப்​பர் மைக்​ரோ’ நிறு​வனம் சென்​னை​யில் ரூ.477 கோடி​யிலும், ஷைலி இன்​ஜினீயரிங் நிறு​வனம் ரூ.500 கோடி​யிலும் ஆலைகள் அமைக்​கின்​றன.

காஞ்​சிபுரத்​தில் ஜேகே டயர் நிறு​வனம் ரூ.5,143 கோடி​யில் 3,510 பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் வித​மாக விரி​வாக்​கம் செய்​யப்பட உள்​ளது. மேலும், ஜெர்​மனி​யின் பிட்​சர் நிறு​வனம் ரூ.300 கோடி​யில் காஞ்​சிபுரத்​தில் உற்​பத்தி ஆலையை அமைக்​க​வுள்​ளது.

ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த ஆவிட் குழு​மம் ரூ.7,000 கோடி​யில் 12,000 பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் வகை​யில் திரு​வள்​ளூர் மற்​றும் தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் முதலீடு மேற்​கொள்​ளவுள்​ளது. ஜெர்​மனி​யின் டைம்​லர் நிறு​வனம் ஒரகடம் சிப்​காட்​டில் உள்ள உற்​பத்தி மற்​றும் ஆராய்ச்சி மையத்தை ரூ.4,000 கோடி​யில் விரி​வாக்​கம் செய்ய உள்​ளது.

மாநாட்டில், ரூ.4,476 கோடி முதலீடு மற்றும் 5,074 பேருக்கு வேலை அளிக்கும் எல் அண்ட் டி, ஸ்ரீ சிமென்ட்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். அதேபோல், விக்ரம் சோலார் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரத்தில் முதல் முறை: தொழில் வளர்ச்​சி​யில் பின்​தங்​கிய ராம​நாத​புரத்​தில் முதல் முறை​யாக கோத்​தாரி குழு​மம் சார்​பில் ரூ.1,000 கோடி முதலீட்​டில் மாபெரும் காலணி உற்​பத்தி ஆலை அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் 10,000 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்க உள்​ளது. டைட்​டன் நிறு​வனம் ஓசூரில் ரூ.1,000 கோடி​யில் புதிய ஆலையை அமைக்க ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இதன்​மூலம் 1,200 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

சர்வதேச கூட்டாண்மை: வர்த்தகம், இணையப் பாதுகாப்பு, செமி கண்டக்டர் திறன் மேம்பாடு ஆகிய துறைகளுக்காகக் கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யாவின் ‘ஸ்பெர்பேங்க்’ வங்கியுடன் நிறுவன ரீதியான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக தயாரிப்புகளைச் சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லும் திட்டமும், ‘போஷ்’ நிறுவனத்துடன் இணைந்து 10,000 மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்புப் பயிற்சி அளிக்கும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT