தமிழகம்

தவெக எம்எல்ஏ-வுக்கு ரூ.35 கோடி தருவதாக பேரம்: கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தவெக எம்​எல்​ஏவிடம் ரூ.35 கோடி பேரம் நடத்​தி​ய​தாக கைதான 3 பேரை 5 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனு​மதி கோரி போலீ​ஸார் தாக்​கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் இன்​றைக்கு தள்ளி வைத்​துள்​ளது.

சட்​டப்​பேர​வைத் தலை​வருக்கு எதி​ரான தீர்​மானத்​தின்​போது தங்​களுக்கு ஆதர​வாக நடந்து கொள்​ளக்​கூறி ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம், ரூ.35 கோடி தரு​வ​தாக குதிரை பேரம் நடத்​தி​ய​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் 9 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

இதில் திமுகவை சேர்ந்த நரேஷ், ரமேஷ், கார்த்​திக் ஆகிய 3 பேரை 5 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனு​மதி கோரி திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் தரப்​பில் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தது.

இந்த மனு மீதான விசா​ரணை முதன்மை அமர்வு நீதி​மன்ற நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்​பாக நடந்​தது. அப்​போது சம்​பந்​தப்​பட்ட மூவரும் நேரில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். திரு​வல்​லிக்​கேணி சரக காவல் உதவி ஆணை​யர் அழகு, இந்த வழக்கு குறித்து நீதி​மன்​றத்​தில் ஆஜராகி விளக்​கமளித்​தார்.

குற்​றம்​சாட்​டப்​பட்ட மூவர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்.இளங்​கோ, “ஆட்​சியை கவிழ்க்க சதித்​திட்​டம் தீட்​டிய​தாக கூறப்​படு​வது என்​பதுதீவிர​வாதத்​துடன் தொடர்​புடையது.

ஆளுங்​கட்​சி​யினரின் அழுத்​தம் காரண​மாக போலீ​ஸார் கற்​பனை அடிப்​படை​யில் இந்த வழக்கை பதிவு செய்​துள்​ளனர். புகாரின் உண்​மைத்​தன்​மையை ஆரா​யாமல் இது​வரை 9 பேரை கைது செய்​துள்​ளனர். அரசி​யல் காரணங்​களுக்​காக தீய நோக்​கத்​துடன் வழக்கு புனையப்​பட்டு இருப்​பது

தெளி​வாகிறது. தற்​போது மூவரை​யும் போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரிக்க வேண்​டிய அவசி​யமே இல்​லை. எனவே, இவர்​களுக்கு ஜாமீன் வழங்க வேண்​டும்” என வாதிட்​டார்.

காவல்​துறை தரப்​பில் ஆஜரான அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர் அருண் அன்​புமணி, “இந்த வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட, கைதான அனை​வரும் விலை உயர்ந்த ஐபோன்​களை பயன்​படுத்தி உள்​ளனர். அதன்​மூலம் அனைத்து தகவல் பரி​மாற்​றங்​களை​யும் அழித்​துள்​ளனர்.

ஒருநபர் சிங்​கப்​பூரில் இருந்து கொண்டு அங்​கிருந்​த​படி தகவல்​களை அழித்​துள்​ளார். எம்​எல்​ஏ-வுக்கு தரு​வ​தாக கூறப்​பட்​டுள்ள ரூ. 35 கோடி சிறிய தொகை கிடை​யாது. இந்​தப் பணம் யாருடையது, எங்​கிருந்து வரு​கிறது என்​பதை முழு​மை​யாக ஆராய வேண்​டி​யுள்​ளது.

சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​துள்​ளதா என்​ப​தை​யும் கண்​டறிய வேண்​டி​யுள்​ளது. 3 பேரை​யும் காவலி்ல் எடுத்து விசா​ரித்​தால் மட்​டுமே புலன் விசா​ரணை முழு​மையடை​யும்” என வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி, நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட 3 பேரிட​மும் போலீஸ் காவலில் செல்​வதற்கு ஆட்​சேபம் உள்​ளதா எனக்​கேள்வி எழுப்​பி​னார்.

அதற்கு அவர்​கள், ஏற்​கெனவே போலீ​ஸார் தங்​களது வீடு​களில் சோதனை நடத்​தி, மிரட்டி வெற்று பேப்​பரில் கையெழுத்து வாங்​கி​யுள்​ள​தாக​வும், தங்​களுக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தால் போலீ​ஸாரின் காவலுக்கு அனுப்​பக்​கூ​டாது என்​றும் ஆட்​சேபம் தெரி​வித்​தனர். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, மனு மீதான தீர்ப்பை இன்​றைக்கு (ஜூலை 8) தள்ளி வைத்​துள்​ளார்.

SCROLL FOR NEXT