தமிழகம்

தவெக பொதுச்செயலாளரை நாங்கள் சந்தித்தது ஏன்? - அதிமுக எம்எல்ஏ வேலுமணி விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தல் தோல்விக்​குப் பிறகு, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் தரப்​புக்கு இடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டது. பலகட்ட பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு இருதரப்​பும் சமரச​மானது.

ஆனாலும், அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​களை மீண்​டும் சேர்த்து கட்​சியை பலப்​படுத்த வேண்​டுமென சி.​வி.சண்​முகம், எஸ்​.பி.வேலுமணி, கே.பி.அன்​பழகன், நத்​தம் விஸ்​வ​நாதன் உள்​ளிட்ட சில எம்​எல்​ஏக்​கள் கோரிக்கை வைத்​தனர்.

அதை ஏற்​காத​தால் பழனி​சாமி மீது அவர்​கள் அதிருப்​தி​யில் உள்​ளனர். கட்​சி​யின் ஆலோ​சனைக் கூட்​டங்​கள் எதி​லும் இவர்​கள் பங்​கேற்​ப​தில்​லை. சட்​டப்​பேரவை கூட்​டத்​துக்​கும் தனி அணி​யாக வந்​துசெல்​கின்​றனர்.

இந்​நிலை​யில், நேற்று சட்​டப்​பேர​வைக் கூட்​டம் முடிந்​தவுடன் சி.​வி.சண்​முகம், எஸ்​.பி.வேலுமணி, கே.பி.அன்​பழகன் ஆகிய 3 பேரும் நீர்​வளத்​துறை அமைச்​சர் ஆனந்​தை, தலை​மைச் செயல​கத்​தில் அவரது அறைக்கு சென்று சந்​தித்​தனர். இந்த சந்​திப்பு சுமார் 20 நிமிடம் நடை​பெற்​றது. அதற்கு முன்​பாக அவர்​கள் அமைச்​சர் செங்​கோட்​டையனை​யும் சந்​தித்​த​தாக கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பாக எஸ்​.பி.வேலுமணி கூறும்​போது, “பட்​ஜெட்​டில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா கொண்​டு​வந்த தாலிக்கு தங்​கம், மடிக்​கணினி போன்ற திட்​டங்​களை தவெக அரசு தொடர்ந்து செயல்​படுத்​து​வது வரவேற்​கத்​தக்​கது.

இது முதல் பட்​ஜெட் என்​ப​தால், வரும்​காலங்​களில் தேர்​தல் வாக்​குறு​தி​களை அரசு நிறைவேற்ற வேண்​டும். அத்​திக்​கடவு அவி​நாசி திட்​டம்-2 நிறைவேற்ற வேண்​டுமென அமைச்​சர் ஆனந்தை சந்​தித்து கோரிக்கை வைத்​தேன்.

அதி​முக​வில் இருந்து வில​கு​வ​தாக தவறான தகவல்​களை பரப்பி வரு​கிறார்​கள். அதி​முக எங்​களின் கட்​சி” என்​றார் சி.​வி.சண்​முகம் கூறும்​போது, “மானியக் கோரிக்​கை​யில் தொகுதி சார்ந்த கோரிக்​கைகளை அமைச்​சர் ஆனந்​திடம் வழங்​கினோம்.

தமிழகத்​துக்கு அவர் அமைச்​சர் என்​ப​தால் நேரில் பார்த்​தோம். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை சந்​திப்​ப​தில்​லையே என்று கேட்​கிறீர்​கள். அவருக்​கும் எங்​களுக்​கும் என்ன இருக்​கிறது? நான் ஏன் பழனி​சாமியை சந்​திக்க வேண்​டும்” என்​றார்.

எம்​எல்​ஏக்​கள் சந்​திப்பு

அதே​போல், சட்​டப்​பேர​வை​யில் முன்​வரிசை​யில் வாய்ப்பு மறுக்​கப்​பட்​டது குறித்து பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகரை, எம்​எல்​ஏக்​கள் மு.தமி​முன் அன்​சாரி (மஜக), ஜவாஹிருல்லா (மமக), நித்​தி​யானந்​தன் (கொமதேக) ஆகியோர் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று சந்​தித்து பேசினர்.

அப்​போது கூட்​டணி கட்​சி​யின் சின்​னங்​களில் போட்​டி​யிடு​வது அந்த நேர அரசி​யல் நடவடிக்​கை​யாகும். நாங்​கள் மூவரும் தனிக்​கட்சி நடத்தி வரு​வ​தால் தங்​களுக்கு முன்​வரிசை வாய்ப்​பு​களை வழங்க வேண்​டுமென கோரிக்கை விடுத்​தனர்.

முந்​தைய திமுக, அதி​முக ஆட்​சி​யிலும் இந்த மரபு​கள் பின்​பற்​றப்​பட்​ட​தாக பேர​வைத் தலை​வரிடம் அவர்​கள் சுட்​டிக்​காட்​டினர். இந்த விவ​காரத்​தில் அதி​காரி​களு​டன் ஆலோ​சித்து நடவடிக்கை எடுப்​ப​தாக பேர​வைத் தலை​வர் பிர​பாகர் பதில் அளித்​த​தாகக் கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT