தமிழகம்

“கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு கட்சிகள் வர வேண்டும்” - தவாக தலைவர் வேல்முருகன்

செய்திப்பிரிவு

கோவை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு திமுக, அதிமுக வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

கோவை புலியகுளம் பகுதியில், இளைஞர்கள் த.வா.க-வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெ ற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல கட்சிகள் கூட்டணி பேசிவருகின்றன. ஆனால், நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.

          

தமிழீழ மண்ணில் நடந்த இனப் படுகொலைக்காக நீதி கேட்டு போராடி வருகிறோம். தேர்தல் அரசியல் என்பது மக்களுக்காக போராடுவது. அதனை எங்கள் கட்சி செய்யும்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எதுவும் இல்லை. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழ் சமூகத்திற்கு பிரதமர் மோடி அரசு எதுவும் செய்யவில்லை.

அதிமுக 200 தொகுதிக்கு மேல் வெல்லும் என அக்கட்சியின் பொதுச் செய லாளர் பழனிசாமி கூறுகிறார். ஆனால், பழனிசாமி தான் முதல்வர் என மத்திய அமைச்சர் அமித்ஷா இதுவரை அறிவிக்க வில்லை.

தமிழ்நாட்டில் பாஜக வர வாய்ப்பு இல்லை. கூட்டணி ஆட்சி என திமுக, அதிமுக இரண்டும் கூறவில்லை. ஆனால், அவர்கள் அந்த நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT