மதுரை: பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மதுரை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷிடம் நேற்று மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில், இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கு, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்’ (பிசிஎம்) சான்றிதழும், 3.5 சதவீத இட ஒதுக்கீட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதனை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது. இஸ்லாம் மத நம்பிக்கையில் சாதி இல்லை. இங்கு வந்த பின்பும் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பெற முயற்சிப்பது இஸ்லாம் நம்பிக்கைக்கு எதிரானது. எனவே, தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வாக்கு வங்கிக்காக, மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம். இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.