தமிழகம்

பேசுபொருளான ​முதல்வரின்​ நலத்திட்டங்கள்​: வீரபாண்டியன்​ சொல்கிறார்​

செய்திப்பிரிவு

சென்​னையில் சைதாப்​பேட்டை, விருகம்​பாக்கம் தொகுதி​களில் போட்டி​யிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களான மா.சுப்​பிரமணியன் மற்றும் ஏ.எம்​.​வி.பிர​பாகர்ராஜா ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று பிரச்​சாரம் மேற்கொண்​டார்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கடந்த 6 தினங்களாக தென் மாவட்​டங்​களில் பிரச்​சா​ரத்தில் ஈடுபட்​டிருந்​தேன். அப்போது பல கிராமங்​களுக்கு சென்றேன். அங்குள்ள மக்களின் மனநிலை திமுக கூட்ட​ணிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதாகவே இருக்​கிறது. வரலாறு காணாத வெற்றியை திமுக கூட்டணி பதிவு செய்யும். அதற்கு காரணம் மக்களிடையே முதல்​வரின் நலத்திட்​டங்கள், தேர்தல் அறிக்கை என அனைத்தும் பேசுபொருளாகி​யிருப்பது தான்.

          

சென்னையை பொறுத்தவரை இது திமுகவின் கோட்டை. சென்னை மக்கள் எப்போது சாதி, மத அரசியலை, பதற்ற அரசியலை விரும்​ப​மாட்​டார்கள். உலகில் எங்கிருந்து வந்தாலும் எல்லோரையும் கூடி அரவணைத்து கொள்கிற பழக்கம் சென்னைக்கு உண்டு. இங்கு பிளவுவாத கருத்​தாளர்​களுக்கு இடமில்லை. அவர்களை தோற்கடிப்​பார்கள். அந்​தவகை​யில் அ​திமுக - பாஜக கூட்​ட​ணி​க்கு தோல்வி உறுதி.இவ்வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT