திமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் இதுவரை ஒரு முறை மட்டுமே விசிக அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்கிறது. ஆனால், திமுக 7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. விசிக இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், விசிக தலைவர் இது விஷயமாக முதல்வருடன் இரண்டு முறை நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழகத்தில் 8 தொகுதிகளும் புதுச்சேரியில் 2 தொகுதிகளும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அவர் கேட்டதாகத் தெரிகிறது.
ஆனால் அப்போதும், 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என உறுதியாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்த நிலையில், நேற்று விசிக பேச்சுவார்த்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் வரவில்லை.
கட்சி நிர்வாகிகள் 8 தொகுதி களுக்கு குறைய வேண்டாம் என்று திருமாவை வலியுறுத்துவதே இதற்கும் காரணம் என்று சொல்கிறார்கள். என்றாலும் இன்று அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கலாம் எனத் தெரிகிறது.