தமிழகம்

‘அணி மாறி இருந்தாலும் கோட்பாடு அடிப்படையில் திமுகவும், விசிகவும் ஒன்றுதான்’ - அமைச்சர் வன்னியரசு திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தேர்தல் சூழ்நிலை காரணமாக அணி மாறி இருந்தாலும் கோட்பாடு அடிப்படையில் திமுகவும், விசிகவும் ஒன்றுதான்’ என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தவெக அரசின் கடந்த 4 மாத கால சிறப்பான செயல்பாடு களும், முதல்வரின் திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணிக்கான வெற்றி உறுதியானது. இடைத்தேர்தலில் தலைவர்கள், தீவிரமாக பரப்புரை செய்வதை வைத்து தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது.

பாமக எடுக்கும் முடிவுகள் அனைத்தும், பாஜகவின் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே உள்ளன. எனவே பாமக தங்கள் ஓனரான பாஜகவை கேட்டுவிட்டுதான், இந்தக் கூட்டணியில் இணைவதா வேண்டாமா என்று முடிவு செய்யும்.

ஒன்றாக பயணிக்கிறோம்: சமூக நீதி, மாநில உரிமை, சனாதன எதிர்ப்பு மற்றும் திராவிடக் கோட்பாடுகளின் அடிப்படையில் திமுகவும், விசிகவும் ஒரே பாதையில் பயணிக்கும் இயக்கங்களாகவே உள்ளன. இப்போது தேர்தல் சூழ்நிலை காரணமாக அணி மாறி இருந்தாலும், கோட்பாடு அடிப்படையில் நாங்கள் ஒன்றாகத்தான் பயணிக்கிறோம்.

மாணவர் விடுதி ஒன்றில் நாங்கள் ஆய்வு நடத்தியபோது, அங்கு மாணவர்கள், மட்டனுக்குப் பதிலாக, மாட்டிறைச்சி வேண்டும் என்று கேட்டனர். நான் அதை பரிசீலிப்போம் என்று மாணவர்களிடம் கூறினேன். ஆனால் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்வருக்குதான் உள்ளது.

அதேநேரம், இதைப்பயன்படுத்தி வடமாநிலங்களைப்போல் மாட்டிறைச்சி உணவு விவகாரத்தை முன்னிறுத்தி, தமிழகத்திலும் மத அரசியல் செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் முயற்சி செய்கின்றன. இத்தகைய மதவாத அரசிய லுக்கு தமிழகத்தில் ஒருபோதும் இடம் கிடையாது. இவ்வாறு அமைச்சர் வன்னியரசு கூறினார்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT