தமிழகம்

வேங்கைவயல் சம்பவத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுகவுக்கு அமைச்சர் வன்னியரசு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: வேங்​கைவயல் சம்​பவத்​தில் பாதிக்​கப்​பட்ட பட்​டியலின மக்​களுக்கு வஞ்​சம் செய்​த​தால் திமுக மன்​னிப்பு கேட்க வேண்​டும் என அமைச்​சர் வன்​னியரசு கருத்து தெரி​வித்​துள்​ளார்.

திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் அவர் நேற்று செய்​தி​யாளர்களிடம் கூறிய​தாவது: மாணவர் பார​தி​தாசன் கல்வி நிதி விவ​காரத்​தில் திமுக அரசி​யல் செய்​கிறது. அம்​பேக்​தர் அயலக உயர்​கல்வி உதவித்​தொகை திட்​டத்​தில் திமுக ஆட்​சி​யில் தகுதி பெற்ற 601 மாணவர்​களில் 183 பேருக்கு மட்​டுமே அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதர பட்​டியலின மாணவர்​களுக்கு திமுக துரோகம் செய்​துள்​ளது.

வேங்​கைவயல் சம்​பவத்​தில் பாதிக்​கப்​பட்ட மக்​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்​தது திமுக அரசு. இதனால் காவலர் முரளி​ராஜா என்​பவர் பணி​யிடை நீக்​கம் செய்யப்​பட்​டார். தவறு ஏதும் செய்​யாத நிலை​யில் திமுக ஆட்​சி​யில் வஞ்​சிக்​கப்​பட்ட எனக்கு நியா​யம் கிடைக்​க​வில்லை எனக்​கூறி என்​னிடம் மனு கொடுத்​துள்​ளார்.

அவரை பணி​யிடை நீக்​கம் செய்​தது தவறு என புதுக்​கோட்​டை​யில் போராட்​டம் நடத்​தி​விட்​டு, அப்​போதைய முதல்​வர் ஸ்​டா​லினை சந்​தித்து திருமாவளவன் பேசி​னார். பட்​டியலின மாணவர்​கள், இளைஞர்​களை மிக மோச​மாக அன்​றைய திமுக அரசு வஞ்​சகம் செய்​துள்​ளது. எனவே வேங்​கைவயல் சம்​பவத்​தில் திமுக மன்​னிப்பு கேட்க வேண்​டும்.

திருநெல்​வேலி​யில் கவின் படு​கொலை​யில் இளைஞர் சுர்​ஜித்​தின் தந்தை சரவணன், தாயார் கிருஷ்ணகுமாரியை கைது செய்​யக் கோரி விசிக போராட்​டம் நடத்தி​யது. அதன் ​பிறகு தான் சரவணன் கைது செய்​யப்பட்​டார். இதில் தொடர்புடைய கிருஷ்ணகு​மாரி திமுக ஆட்சி​யில் கைது செய்யப்​படவில்​லை. பின்​னர், முதல்​வர் விஜய்​யின் கவனத்​துக்கு கொண்டு சென்​று கிருஷ்ணகு​மாரி கைது செய்​யப்​பட்​டார்.

பட்​டியலின மாணவர் பார​தி​தாசன் மீது அக்​கறை இருப்​பது​போல் திமுக நாடக​மாடு​கிறது. மாணவர் பார​தி​தாசன் வீட்​டில் உளவுத்​துறை போலீஸ் சென்​ற​தாக கூறப்​படு​வது திட்​ட​மிட்டு பரப்​பப்​படும் அவதூறு. சோதனை போன்ற சம்​பவம் நடை​பெற​வில்​லை. அப்​படி நடந்​தா​லும் ஏற்​றுக்​கொள்ள மாட்​டோம். சட்​ட​விரோத​மாக செல்​வதற்​கும் அனு​ம​திக்​க​மாட்​டோம். பார​தி​தாசன் முழு​மை​யாக படித்​து​ வர வேண்​டும்.

அயலக உயர்​கல்வி உதவித்​தொகை திட்​டத்​தில் திமுக அரசு மேற்​கொண்ட வழி​முறை​களை தவெக அரசும் பின்​பற்​றுகிறது. அவர்​களை போன்​று​தான் கணக்கு கேட்​கப்​பட்​டது. கணக்கு கேட்​கக்​கூ​டாது என திமுக நினைக்​கிறது. முறை​யாக ரசீது அனுப்​ப​வில்லை என்​றாலும், மாணவர் பார​தி​தாசனின் கல்வி நலன் கருதி முழுபணமும் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது.

விமான நிலை​யத்தை தனி​யாருக்கு தாரை வார்ப்​பதை கொள்​கைரீ​தி​யாக விசிக ஏற்​றுக் கொள்​ளாது. அதானி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​ட​தாக தமிழக அரசு அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​க​வில்​லை. முதல்​வர் விஜய், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் சொல்​லும்​போது​தான் தெரிய​வரும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT