சூளைமேடு பிரதான சாலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி.

 
தமிழகம்

ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட சூளைமேடு பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, சூளைமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மகளிர் அணி செயலாளருமான வளர்மதி போட்டியிடுகிறார்.

          

நேற்று முன்தினம் தனது பிரச்சாரத்தை தொடங்கி, கோபாலபுரம், ராயப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், சூளைமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர்களிடம் வளர்மதி பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் சொத்துவரி உயர்ந்துள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ளது போல, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதன பெட்டி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, குடும்ப தலைவிக்கு ரூ.2 ஆயிரம் என அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற் றப்படும். தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக ஆயிரம் விளக்கு தொகுதியை மாற்றுவேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT