தமிழகம்

வைகோ vs நயினார்: தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு எத்தனை மார்க்?

செய்திப்பிரிவு

100-க்கு 80 மதிப்பெண்: வைகோ

திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களிடம் மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ கூறிய​தாவது: முதல்​வர் விஜய் ஊழலற்ற அரசு நடத்தி வரு​கிறார். 100 நாட்​களை கடந்​துள்ள தவெக ஆட்​சிக்கு 100-க்கு 80 மதிப்​பெண்​கள் வழங்​கு​கிறேன்.

ஊழலை முழு​மை​யாக ஒழிப்​பது சாதாரண காரி​யம் அல்ல. அதே​நேரத்​தில் தமிழக அரசு ஊழலை ஒழிக்​கும் நடவடிக்​கை​யில் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறது. எனினும், சில மூத்த அதி​காரி​கள் அரசுக்கு முழு​மை​யாக ஒத்​துழைக்​க​வில்லை.

ராகுல் காந்​தியை பிரதம​ராக ஏற்​றுக்​கொள்​ளா​விட்​டால் பதவியை ராஜி​னாமா செய்​வோம் என்று அமைச்​சர் ராஜேஷ்கு​மார் தெரி​வித்​த​து குறித்த கேள்விக்​கு, ‘தமிழக முதல்​வரின் கற்​பனை​யில் கூட பிரதமர் என்ற கருத்து இருக்​காது. அமைச்​சர்​கள் இது​போன்ற கருத்​துகளை தெரி​விப்​பதை தவிர்க்க வேண்​டும். ராகுல்தான் பிரதமர் வேட்​பாள​ராக இருக்க முடி​யும்.

மைனஸ் 80 மதிப்பெண்: நயினார்

திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களிடம் பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறியது: தற்​போதைய சட்​டப்​பேர​வை​யில் அமைச்​சர்​கள் உறுப்​பினர்​களைப் பார்த்து ‘உன் மாமா​விடம் கேள், உன் அப்​பா​விடம் சொல்’ என்று தரம் தாழ்ந்து பேசுவது வருத்​தமளிக்​கிறது. விஜய் பிரதமர் வேட்​பாள​ராக இருப்​பார் என அமைச்​சர்​கள் பேசுவது நாடகமா அல்​லது நடக்​காத விஷ​யத்தை பேசுகிறார்​களா என்று தெரிய​வில்​லை.

தலைமை செயல​கத்​தில் முதல்​வரின் அறையை மாற்றி அமைக்​கும் பணிக்​காக ரூ.5.40 கோடி செல​விடப்​பட்​டுள்​ளது. இதற்​கான டெண்​டர் எது​வும் கோரப்​பட​வில்லை என அமைச்​சரே ஒப்​புக்​கொண்​டுள்​ளார். டெண்​டர் இன்றி இவ்​வளவு பெரிய தொகையை நேரடி​யாக பணி​களுக்கு ஒதுக்​கீடு செய்​வது கூட்டு ஊழலாகும். தவெக​வின் 100 நாள் ஆட்​சிக்கு மைனஸ் 80 மதிப்​பெண் வழங்​கு​கிறேன்.

SCROLL FOR NEXT