தமிழகம்

தவெக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்: வைகோ கணிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தவெக தவிர்க்க முடி​யாத சக்​தி​யாக இருக்​கும், தேர்​தல் முடிவு​களில் அக்​கட்சி பல ஆச்​சரி​யங்​களை ஏற்​படுத்​தும் என்​றும் திமுக கூட்​டணி பெரும்​பான்மை பெற்று மீண்​டும் ஆட்சி அமைக்​கும் எனவும் மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரி​வித்​துள்​ளார்.

மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் 1967-ல் அண்ணா முதல்​வ​ராக பொறுப்​பேற்​றவுடன் கோவை சிதம்​பரம் பூங்​கா​வில் மே தினத்தை கொண்​டாடி அரசு விடு​முறை என அறி​வித்​தார்.

மத்​திய அரசு மே தினத்தை விடு​முறை​யாக அறிவிக்க வேண்​டும் என்று நான் 1990-ம் ஆண்டு ஏப்​.30-ம் தேதி மாநிலங்​களவை​யில் குரல் எழுப்​பினேன். இந்த கோரிக்​கையை கம்​யூனிஸ்ட், ஜனதா தள உறுப்​பினர்​கள் ஆதரித்​தனர்.

உடனே பிரதமரை சந்​தித்து அன்​றையே தினமே அதை அறிவிக்க வேண்​டும் என வலி​யுறுத்​தினேன். இதையடுத்து அன்று ராம் விலாஸ் பஸ்​வான் இரு அவை​களி​லும் அறி​வித்​தார். மோடி அரசு தொழிலா​ளர்​களை நசுக்கி முதலா​ளித்​து​வத்​துக்கு ஆதர​வாக, முதலா​ளி​களின் பிர​தி​நி​தி​களாக செயல்​படு​கிறது.

தொழிலா​ளர்​கள் உரிமை​கள் நசுக்​கப்​படுவதை எதிர்த்​தும், உரிமை​களுக்​காக​வும் போராடு​கிறார்​கள். நாங்​களும் அவர்​களுக்​காக போராடு​வோம்.

திமுக கூட்டணி வெல்லும்

அதி​க​மான கருத்​துக் கணிப்​பு​கள் திமுக கூட்​டணி தான் வெல்​லும் என்​கிறார்​கள். ஒரு கருத்​துக் கணிப்பு அதி​முக​வுக்​கும், மற்றொன்று தவெகவுக்கும் சாத​கமாக வந்துள்ளன.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணும் போது உன்மை நில​வரம் தெரிய​வரும். என்​னுடைய கருத்து திமுக கூட்​டணி அதிக இடங்​களில் வெல்​லும், திமுக ஆட்​சி​யமைக்​கும் என நம்​பிக்​கையோடு இருக்​கிறேன்.

தவெக தவிர்க்க முடி​யாத சக்​தி​யாக இருக்​கும், தேர்​தல் முடிவு​களில் தவெக பல ஆச்​சரி​யங்​களை ஏற்​படுத்​தலாம். மாணவர்​கள் மற்​றும் முதல் முறை​ வாக்​காளர்​கள் மத்​தி​யில் தவெக​வுக்கு அதிக ஆதரவு கிடைக்க வாய்ப்​புள்​ளது.

திரா​விட இயக்​கம் பல தியாகங்​கள் மற்​றும் துன்​பங்​களின் மேல் கட்​டப்​பட்​டது. ஆயிரக்​கணக்​கானோர் இந்த இயக்​கத்தை வளர்க்க உயிர் தியாகம் செய்​துள்​ளனர். தேர்​தலில் வெற்​றியோ தோல்​வியோ திரா​விட இயக்​கம் இந்த மண்​ணில் நிரந்​தர​மாக இருக்​கும்.

பாஜக நினைப்​பது போல் அதை அசைத்து பார்க்க முடி​யாது. பல மாநிலங்​களில் பாஜக ஊடுருவ நினைக்​கிறது.

திராவிட இயக்கத்தின் தேவை

கேரளா​வில் அது சாத்​தி​யமில்​லை, மேற்கு வங்​கத்​தில் நிலைமை மாறலாம். நாம் பாஜக மற்​றும் ஹிந்​துத்​துவ அராஜகத்தை எதிர்க்க வேண்​டும். மேலும் இது குறித்து இளைய சமு​தா​யத்​தினரிடம் கொண்டு செல்ல வேண்​டும்.

தற்​போது அது நடப்​ப​தில்​லை. இனி இளைய தலை​முறை, மாணவர்​கள் மத்​தி​யில் இதை கொண்டு சேர்ப்​பதே திரா​விட இயக்​கத்​தின் தேவை​யாக உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்

SCROLL FOR NEXT