தமிழகம்

‘12 தொகுதிகள் இல்லாவிட்டால் ராஜ்ய சபா சீட் வேண்டும்’ - மல்லுக்கட்டத் தயாராகும் மதிமுக

செய்திப்பிரிவு

“ஆட்சி அதி​காரத்​தில் மதி​முக ஒரு​ போதும் பங்கு கேட்​ட​தில்​லை; இனி​யும் கேட்க மாட்​டோம்” என மதி​முக பொதுச்​செயலா​ளர் வைகோ முன்​கூட்​டியே ஒப்​புதல் வாக்​குமூலம் கொடுத்​து​விட்​டாலும் இம்​முறை 12 தொகு​தி​களை திமுக-​விடம் கேட்​டுப் பெற்​றாக வேண்​டும் என்​ப​தில் மதி​முக-​வினர் மல்​லுக்​கட்​டுக்​கும் தயா​ராய் இருக்​கி​றார்​கள்.

2019 மக்​கள​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் சங்​கமித்த மதி​முக-வுக்​கு, ஒரு தொகு​தி​யும் ஒரு ராஜ்ய சபா சீட்​டும் ஒதுக்​கியது திமுக. அதன்​படி, 2019-ல் மாநிலங்​களவை உறுப்​பின​ராகப் பொறுப்​பேற்ற வைகோ, 2025 ஜூலை​யில் ஓய்வு பெற்​றார். "ஐயா​வுக்கு மீண்​டும் ஒரு வாய்ப்​பளிக்க வேண்​டும்" என மதி​முக தரப்​பிலிருந்து அழுத்​தம் கொடுக்​கப்​பட்ட நிலை​யில், மகன் துரை

          

வைகோவுக்கு ஏற்​கெனவே எம்பி சீட் கொடுக்​கப்​பட்டு விட்​டதைச் சுட்​டிக்​காட்டி வைகோவை மீண்​டும் மாநிலங்​களவைக்கு அனுப்ப திமுக மறுத்​து​விட்​டது.

வைகோவுக்கு மறுத்​து​விட்டு அந்த இடத்தை கமல்​ஹாசனுக்கு கொடுத்​த​தில் பம்​பரம் பார்ட்​டிகளுக்கு தாங்​க​முடி​யாத வருத்​தம்தான். இதன் எதிரொலி​யாக கடந்த ஆண்டு ஈரோடு பொதுக்​குழு​வில் பேசிய மதி​முக அவைத் தலை​வர் அர்​ஜுன் ராஜ், "ரா​மன் வனவாசம் சென்​ற​தால் தான் பரதனுக்​குப் பட்​டாபிஷேகமே நடந்​தது" என ஸ்டா​லினைச் சீண்​டி​னார். இதற்கு தனது செய்​கை​யால் பதில் சொன்ன திமுக, வைகோ​வின் வலதுகர​மான முத்​துரத்​தினம் உள்​ளிட்ட மதி​முக-​வினரை அறி​வால​யத்​துக்கு அழைத்​துக் கொண்​டது.

அடுத்​த​தாக மல்லை சத்​யா​வும் தனது சகாக்​களு​டன் திமுக பக்​கம் தாவப் போகி​றார் என்று தெரிந்​ததும் அதற்கு வேறு​வித​மாக செக் வைத்து தாவலை மாற்​று​வழி​யில் திருப்பி விட்​டார் வைகோ. கூட​வே, மதி​முக நிர்​வாகக் குழு​வைக் கூட்​டி, 'இந்​துத்​துவ சக்​தி​களை முறியடிக்க 2026-லும் திமுக கூட்​ட​ணியே தொடரும்' எனத் தீர்​மானம் நிறை​வேற்​றி​னார். இதனிடையே, தேர்​தல் ஆணை​யத்​தின் அங்​கீ​காரத்​தைப் பெறு​வதற்​காக 12 தொகு​தி​களைக் கேட்க மதி​முக தயா​ராகி வரு​வ​தாகச் சொல்​கி​றார்​கள்.

இதுகுறித்​துப் பேசிய தாயகப் புள்​ளி​கள், "2021 சட்​டமன்​றத் தேர்​தலில் 6 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 4-ல் வெற்றி பெற்​றோம். இந்த முறை, வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்​கப்​பட்​ட​தில் நிர்​வாகி​கள் கடும் அப்​செட். சமீபத்​தில் நடந்த மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில், 'நமக்கு ராஜ்ய சபா சீட் தரப்​ப​டாத​தால் இம்​முறை 12 இடங்​களைக் கேட்க வேண்​டும்' என மாவட்​டச் செய​லா​ளர்​கள் கண்​டிப்​புடன் பேசி​னார்​கள். வைகோ​வும் 'தி​முக குழு அமைத்​ததும் பேசுவோம்' எனச் சொல்லி இருக்​கி​றார்.

இதனிடையே தனிப்​பட்ட முறை​யில் துரை வைகோ எடுத்த சர்​வே​யில் வாசுதேவநல்​லூர், மதுரை தெற்​கு, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, திருச்சி கிழக்​கு, மணப்​பாறை, கும்​பகோணம், பாப​நாசம், மயி​லாடு​துறை, செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 12 தொகு​தி​களில் மதி​முக-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்​ப​தாகத் தெரிய​வந்​துள்​ளது. அந்த 12 தொகு​தி​களை தரவேண்​டும் அல்​லது கடந்த முறையைப் போலவே 6 இடங்​களை ஒதுக்​கு​வதுடன் ஏப்​ரலில் காலி​யாகும் 6 ராஜ்யசபா இடங்​களில் ஒன்​றை​யும் பொதுச்​செய​லா​ள​ருக்​​காக விட்​டுக் கொடுக்க வேண்​டும் என திமுக-​விடம் கேட்​ப​தாக இருக்​கிறது தலை​மை” என்​றனர்​.

SCROLL FOR NEXT