தமிழகம்

சட்டப்பேரவையில் என் குரல் ஒலிக்காது: வைகோ தகவல்

செய்திப்பிரிவு

திமுக கூட்​ட​ணி​யில் மதி​முக​வுக்கு 4 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் மூன்​றில் உதயசூரியன் சின்​னத்​தி​லும், ஒரு தொகு​தி​யில் தனி சின்​னத்​தி​லும் மதி​முக போட்​டி​யிட உள்​ளது. கட்​சி​யின் பதிவை பாது​காத்​துக் கொள்​வதற்​காக ஒரு தொகு​தி​யில் தனி சின்​னத்​தில் போட்​டி​யிட​வுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

இந்நிலையில் தனி சின்​னத்​தில் பிரபல​மான வேட்​பாளரை நிறுத்த வேண்​டும் என்றும் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ போட்​டி​யிட வேண்​டும் எனவும் பெரும்​பாலான மதி​முக​வினர் வலி​யுறுத்​தி​னர். ஆனால் இறுதி முடிவை வைகோ தான் எடுப்பார் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.

          

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் சட்டப்பேரவையில் வைகோவின் குரல் ஒலிக்க வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினர் அதற்கு வைகோ, ‘ஒலிக்காது’ என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ இந்த தேர்தல் குறித்து ஏற்கெனவே திட்டவட்டமாக கூறியுள்ளேன், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெரும். திமுக தனிப்பெரும்பான்மை பெறும். கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறும், திமுக தனித்து ஆட்சி அமைக்க கூடிய பெரும்பான்மையை பெறும். இதுவே தமிழக மக்களின் தீர்ப்பாக இருக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT