சென்னை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் வைகோ 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 6-ம் தேதி முதல் மதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், 2-ம் கட்டமாக இன்று (13-ம் தேதி) முதல் வரும் 21-ம் தேதி வரை தினமும் மாலை 4 முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இன்று சிவகங்கை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு தொகுதிகளிலும், நாளை திருச்செங்கோடு, மொடக்குறிச்சியிலும், ஏப்.15 மற்றும் 17-ம் தேதி சீர்காழியிலும், 16-ல் புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகரிலும், 18 -ல் மொடக்குறிச்சி, 19-ல் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் தொகுதியிலும், 20-ம் தேதி சங்கரன்கோவில், மதுரை தெற்கு, 21-ம் தேதி கடையநல்லூர் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.