மரகதம் மீனாட்சி

 
தமிழகம்

“வ.உ.சிதம்பரனார் பெயரை சொல்லி திமுக வேஷம் போடுகிறது” - வ.உ.சி பேத்தி கண்டனம்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் சிவா, தமிழகத்தைச் சேர்ந்த வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை வட மாநிலங்களில் உள்ள யாருக்காவது தெரியுமா? அவர்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? பள்ளி பாடத்திலாவது இவர்கள் குறித்து கற்பிக்க வேண்டாமா? என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து பொள்ளாச்சி யில் வசிக்கும் வ.உ.சி.யின் மகன் வழி பேத்தி மரகதம் மீனாட்சி கூறியதாவது: வ.உ.சி. பெயர் வட மாநிலத்தில் இல்லை என எம்.பி. சிவா வருத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் திமுக அதிகாரத்தில் உள்ளது.

எத்தனை பல் கலைக்கழகம், நூலகத்துக்கு வ.உ.சி. பெயரை திமுகவினர் வைத்துள்ளனர்? நாடாளு மன்ற வளாகத்தில், சிலை வைக்க வாய்ப்பு கிடைத்த போது, வ.உ.சி.க்கு சிலை வைக்கவில்லை.

முரசொலி மாறனுக்கு சிலை வைத்தனர். முரசொலி மாறன் தியாகம் செய்து, சிறைக்கு சென்று சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? சுதந்திரத்துக்காக போராடியவர்கள் பெயர்கள் தெரியாமல் போனதற்கு காந்தியும், நேருவுமே காரணமாகும்.

பிரதமர் மோடி, வந்தேமாதரம் பற்றி பேசும்போது, வ.உ.சிதம்பரம் பிள்ளை கப்பல் ஓட்டினார் என பெருமையாக குறிப்பிட்டு பேசுகிறார். இதை விட என்ன பெருமை வேண்டும்.

காங்கிரசும், தி.மு.க.வும் வ.உ.சி. உள்ளிட்ட பல தலைவர் களையும் முடக்குவதில் மிகவும் அக்கறையோடு செயல்பட்டனர். இப்போது வேஷம் போட்டுக்கொண்டு இருக்கின்ற னர். இதற்கு எனது கண்ட னத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT