சென்னை: விமான எரிபொருள் மீதான வாட்வரியை தமிழக அரசு குறைத்துள்ளது. இதன்படி சென்னை விமான நிலையத்தில் 29 சதவீதமாக இருந்த வாட் வரி 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள மற்ற விமானநிலையங்களிலும் இது 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில் ‘‘விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு வரவேற்புக்குரிய படியாக, விமான எரிபொருள் மீதான வாட்வரியைக் குறைக்கும் தமிழக அரசைப் பாராட்டுகிறேன். இந்த முன்னெடுப்புக்காக முதல்வர் விஜய்க்கு நன்றி. விமானப் பயணங்களை குறைந்த கட்டணத்தில் வழங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம்’’ என்று தெரிவித்துள்ளார்.