தமிழகம்

கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே ரூ.2,229 கோடியில் 3, 4-வது புதிய ரயில் பாதைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் மற்​றும் ஆந்​திர மாநிலங்​களை இணைக்​கும் கும்மிடிப்பூண்டி - கூடூர் வழித்​தடத்​தில் 3, 4-வது புதிய ரயில் பாதைகள் ரூ.2,229 கோடி மதிப்​பில் அமைக்​கும் திட்​டத்​துக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இந்​திய ரயில்வே வலை​யமைப்பை வலுப்​படுத்​த​வும், ரயில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​க​வும் மேற்கு வங்​கம், ஒடிஸா, தமிழகம் மற்​றும் ஆந்​திரா ஆகிய 4 மாநிலங்​களில் மொத்​தம் 410 கி.மீ நீளத்​துக்கு 4 முக்​கிய பல வழித்தட திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன.

மொத்​தம் ரூ.9,450 கோடி மதிப்​பீட்​டிலான இத்​திட்​டங்​கள் அனைத்​தும் வரும் 2030-31-ம் ஆண்​டுக்​குள் முழு​மை​யாக முடிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் சென்னை - கொல்​கத்தா முதன்மை வழித்​தடத்​தில் அமைந்​துள்ள மிக முக்​கியப் பிரி​வான கும்​மிடிப்​பூண்டி - கூடூர் இடையே ரூ.2,229 கோடி மதிப்​பீட்​டில் 90 கி.மீ. தொலை​வுக்கு 3, 4-வது புதிய ரயில் பாதைகள் அமைக்​கப்​பட​வுள்​ளன.

இந்த 4 திட்​டங்​களின் மூலம் 6,448 கிராம மக்​கள் (சு​மார் 60 லட்​சம் பேர்) நேரடி​யாகப் பயனடை​வார்​கள். வேலை​வாய்ப்பு மற்​றும் சுயதொழில் வாய்ப்​பு​ களும் அதி​கரிக்​கும். நிலக்​கரி, இரும்​புத் தாது, சிமென்ட், எஃகு,வாக​னங்​கள் மற்​றும் உணவு தானி​யங்​கள் விரை​வாகக் கொண்டு செல்​லப்​படும். இதன் மூலம் கூடு​தலாக ஆண்​டுக்கு 76 மில்​லியன் டன்​கள் சரக்​கு​களைக் கையாள முடி​யும்.

ரயில் போக்​கு​வரத்து அதி​கரிப்​ப​தால் நாட்​டின் தளவாடச் செலவு குறைந்​து, சுமார் 13 கோடி லிட்​டர் எரிபொருள் இறக்​குமதி தவிர்க்​கப்​படும். மேலும், 65 கோடி கிலோ கார்​பன் உமிழ்வு குறைக்​கப்​படும். இது 2.60 கோடி மரங்​களை நடு​வதற்​குச் சமமாகும்.

இந்த புதிய வழித்​தடங்​கள், சென்னை மற்​றும் புறநகர்ப் பகு​தி​களில் இருந்து ஆந்​திரா மற்​றும் வடமாநிலங்​களுக்​குச் செல்​லும் ரயில்​களின் பயண நேரத்​தைக் குறைத்​து, ரயில் சேவை​யின் நம்​பகத்​தன்​மை​யை அதி​கரிக்​கும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT