பருவமழை

 
தமிழகம்

தாம்​பரம்: அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றம்

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்​பரம் மாநக​ராட்​சி​யின் 3-வது மண்​டலத்​துக்கு உட்பட்ட மேஜர் முகுந்த் வரத​ராஜன் சாலை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் சாலை​யோரம், பொது இடங்​களில் உரிய அனுமதியின்றி வைக்​கப்​பட்​டிருந்த விளம்​பரப் பலகைகளை மாநக​ராட்சி ஊழியர்​கள் அகற்​றினர்.

இதே​போல் பம்​மல், அனகாபுத்​தூர் பகு​தி​களி​லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்​படுத்​தும் வகை​யில் வைக்கப்பட்டிருந்த விளம்​பரப் பலகைகள் அகற்​றப்​பட்​டன. பருவமழை​யின் ​போது பலத்த காற்று வீசும் நிலை​யில், முறையாகப் பொருத்​தப்​ப​டாத பெரிய அளவி​லான விளம்​பரப் பலகைகள் சாய்ந்து விழு​வதற்​கான வாய்ப்​புள்​ளது.

இதனால் வாகன ஓட்​டிகளுக்கு ஆபத்து ஏற்​படு​வதைத் தடுக்​கும் வகை​யில், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக இப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. மேலும், மாநக​ராட்சி பகுதிகளில் விளம்​பரப் பலகைகள் வைப்​ப​தற்கு உரிய அனு​மதி பெறு​வது கட்​டா​யம் என அதி​காரிகள் தெரி​வித்​துள்​ளனர். அனுமதி​யின்றி விளம்​பரப் பலகைகள் வைக்​கப்​பட்​டிருப்​பது கண்டறியப்​பட்​டால், அவற்றை அகற்​று​வதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநக​ராட்சி விதி​களின்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் எச்​சரித்​துள்​ளனர்.

மாநக​ராட்சி பகு​தி​களில் பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்படுத்தும், அச்​சுறுத்​தலாக இருக்​கும் விளம்​பரப் பலகைகள் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு அகற்​றப்​படும் என்​றும், இதுதொடர்​பாக பொது​மக்​கள் மாநக​ராட்​சிக்கு புகார் தெரிவிக்கலாம்​ என்​றும்​ அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT